இந்த பாதிப்பு உள்ளவர்களை எப்படி அடையாளம் காண்பது?
-தி.சங்கர், உடுமலைப்பேட்டை

து தீவிர மனநோய்களில் ஒருவகை. மனச்சிதைவு நோய் என்பது மனநோய்களிலேயே கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனை, உணர்ச்சிகள், நோக்கும்  திறன், மற்றும் செயல்பாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் கீழ்க்கண்ட அறிகுறிகளில் சிலவோ பெரும்பாலானவையோ இருக்கலாம்.

  1. யாரோ தனக்கு கெடுதல் பண்ணுவது போல நினைப்பது. 
  2. தனக்கு எதிரிகள் இருப்பதாகவும் திட்டமிட்டு சதி செய்வது போன்ற எண்ணம்.
  3. தங்கள் காதில் யாரோ பேசுவது போன்ற பிரமை.
  4. தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்.
  5. தனக்குத்தானே சிரித்தல்.
  6. .உடல் மற்றும் சுற்றுப்புற சுத்தத்தைப் பற்றிய கவலையின்மை.
  7. காரணமில்லாமல் கோபப்படுதல்.
  8. எப்போதும் எரிச்சலுடன் இருத்தல்.
  9. தூக்கமின்மை.
  10. வேலையில் நாட்டமின்மை. 

உங்களுக்குத் தெரிந்தவர் எவருக்காவது மேற்கண்ட தொந்தரவுகள் இருப்பின், அவரது குடும்பத்தினரிடம் விபரமாக எடுத்துச்சொல்லி, அக்குடும்பத்தின் குடும்ப

டாக்டரிடம் உடன் ஆலோசனை பெறச் சொல்லவும்.

குடும்ப டாக்டர் பரிசோதனை செய்து, மன நல மருத்துவரிடம் அனுப்புவார். இது மிக முக்கியம். ஏனெனில், மனச்சிதைவு நோய்க்கு நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவ சிகிச்சை செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருந்துகளின் தேவையும் குறையும்.