
-டாக்டர்.வி.விக்ரம்குமார், எம்.டி.,சித்த மருத்துவம்.
நமது பாரம்பரியத்தின் மிகப்பெரிய மருத்துவ செல்வம் எண்ணெய்க் குளியல்! பல மன நோய்கள் தலைத் தூக்காமல் பார்த்துக் கொள்ள, நல்லெண்ணெய்க் குளியல் உதவும்.
நல்லெண்ணெய்யில் சீரகத்தைப்போட்டு லேசாக கொதிக்க வைத்து, சீரகம் ஒடியும் பக்குவத்தில் இறக்கி, தலைக்குத் தேய்த்து குளிப்பது மிகப்பெரிய நோய்த் தடுப்பு முறை. உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தைக் குறைப்பதற்கு சிறந்த மருந்தில்லா முறை எண்ணெய்க் குளியல்!
பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் மன நோய்களுக்கு எண்ணெய்க் குளியலைத் தாராளமாக முயற்சிக்கலாம். உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் போது, மனதை உற்சாகப்படுத்தும் ஹார்மோன்கள் ஊற்றெடுத்து உற்சாகமாகப்படுத்தும்.
முறையாக எண்ணெய்க் குளியல் செய்யும் மனிதர்களை சல்லடையிட்டுப் பார்த்தாலும் கிடைப்பது அரிது. வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் செய்வதால் மனமும் உடலும் ஆரோக்கியமாக நடைப்போடும்.
நவீன ஆராய்ச்சிகளும் எண்ணெய்க் குளியல் குறித்த மகத்துவங்களை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டத் தொடங்கிவிட்டன!
-டாக்டர்.வி.விக்ரம்குமார், எம்.டி.,சித்த மருத்துவம்.

