
ஆசிரியர் :அக்கு ஹீலர் உமர் பாரூக்.
வெளியீடு: மல்லிகை பிரசுரம்புதிய எண் 4, டெய்லர்ஸ் எஸ்டேட் 2வதுதெரு,
கோடம்பாக்கம், சென்னை -600 024,
75501 83899
பக்கங்கள்: 80 விலை : ரூபாய 100
உடல் நலம் காக்க அருகம்புல் ஜூஸ், தொடங்கி மூச்சுப் பயிற்சி,நடைப்பயிற்சி, தியானம்,யோகா, முத்திரை என்று ஆயிரம் வழிமுறைகளையும் பின்பற்ற மனம் அலை பாய்கிறது.ஆனால் ,
உடல் நலத்திற்கு மனமே ஆதாரம் என்பதை மட்டும் நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
மனதின் ஆற்றலால் நோய்கள் பறந்து போகும் என்பதை அறிந்து கொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.
மனதில் ஏற்படும் எண்ணங்கள் ஒருவருடைய உடல் நலத்தை கெடுக்கவும் பயன்படுகிறது; ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படுகிறது என்பதை பல்வேறு மருத்துவ வரலாற்று தகவல்களோடு எழுதியுள்ளார் இந்த நூலாசிரியர்.
ஒருவருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டால் உடலில் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. வேதியியல் மாற்றம் ஏற்படுவதால் உடல்நிலை மாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் இந்த மாற்றங்கள் மூல காரணமாக அமைந்து விடுகிறது.இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளாமல்…உடல் நலத்திற்கு யார் என்ன மருந்து எடுத்தாலும், எப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் நாம் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
மனதின் ஆற்றல் மருந்துகளை மிஞ்சக் கூடியது மட்டுமல்ல, ஹார்மோன்களை மீறியது மட்டுமல்ல உள் உறுப்புகளை சரி செய்யக்கூடியது தான் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது.
மனச் சமநிலையை அடைந்தால் நோய் பாதிப்புகள் ஏற்படாது. அந்த மனச் சமநிலையை எப்படி அடையலாம் என்பதற்கான வழிமுறைகளையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
மருத்துவ உலகில் இது போன்ற மனம் பற்றிய புத்தகங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்க ஒன்று.

