
நூலாசிரியர்:டாக்டர் தனபாலன் பி.எச்.எம் எஸ்.,எம்.எஸ்.சி.
தொகுப்பு:டாக்டர்.எஸ். வெங்கடாசலம்.
டாக்டர் வெ. ஆவுடேஸ்வரி.
வெளியீடு:தீபா பதிப்பகம்,29/9ஏ,பழைய டிரங்க் ரோடு, சாத்தூர்-626 203.
94431 45700
பக்கங்கள்: 108. விலை :ரூபாய் 120.
ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டுபிடித்த டாக்டர் ஹனிமனின் வாழ்க்கை மற்றும் புதிய மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்ட வரலாறும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
பக்கவிளைவுகள் இல்லாமல், லட்சக்கணக்கில் செலவு செய்து வார கணக்கில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல், வில்லை மலிவான ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் நலம் பெறுவது எப்படி என்பதை மிக எளிமையாக விளக்குகிறது இந்த நூல்.
பிரசவம் என்பது மாபெரும் சிக்கலானதாக செலவு மிக்கதாக மக்கள் கருதுவது அறியாமை. சிசேரியன் இல்லாமல் இயற்கையாக பிரசவம் நடைபெற உதவும் ஹோமியோபதி மருந்துகள் பட்டியல் தரப்பட்டுள்ளது.
பாலியல் பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா,வயிறு தொந்தரவுகள் சைனசைட்டிஸ் போன்ற பாதிப்புகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் தரப்பட்டுள்ளன.
மாதக்கணக்கில்,வருடக் கணக்கில் நோய் பாதிப்புகள் தீராமல் அலைந்து திரிந்தவர்களுக்கு ஹோமியோபதி எப்படியெல்லாம் எளிய முறையில் உதவியது என்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்கம் தந்துள்ள நூல் ஆசிரியருக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.

