புத்திசாலி நோயாளியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் தேவைதானா என்று மருத்துவர்களிடம்  தன்மையாக கேட்டு விளக்கம் பென் வேண்டும்.
 
நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே மருத்துவக் காப்பீடு பாலிஸியை எடுத்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் உடல்நலக் குறைவின் போது மிகவும் உதவியாக இருக்கும்.
 
பொதுவாக மருத்துவமனைக் கட்டணங்கள் அதிக மாகவே இருக்கும். அதில் தவறுகள் ஏதேனும் உள்ளதா, இல்லாத கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என உன்னிப்பாகக் கவனிப்பது கட்டாயம். கம்ப்யூட்டர் பில் எப்போதும் சரியாக இருக்கும் என்ற மனநிலையை மாற்றுங்கள். எதற்குப் பணம் கட்டினாலும், அதற்கு ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.
 
மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் எடுக்க வேண்டியிருந்தால், அது பற்றி மருத்துவரிடம் கேட்டு தேவையான சோதனைகளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
 
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நேரம் முக்கியமானது. டிஸ்சார்ஜ் ஆகும் போது, எவ்வளவு நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று கேட்டுத்தெரிந்து
கொண்டு, அந்த நேரத்தில் வெளியேற வேண்டும். தேவை யில்லாமல் தங்கிக் கொண்டிருந்தால், கூடுதல் கட்டணம் கட்ட நேரிடும்.
 
உங்களுக்கு அவசரச் சிகிச்சை தேவைப்பட்டால் ஒழிய வார இறுதி நாட்களில் மருத்துவமனைகளில் போய்ச் சேர வேண்டாம். வார இறுதி நாட்களில் தொழில்நுட்ப வல்லுனர்கள் விடுமுறை எடுத்துக் கொள்வதால், நீங்கள் தேவையில்லாமல் திங்கள் கிழமை வரை மருத்துவமனையில் காத்திருக்க நேரிடும்.
 
உங்கள் வசதி, வாய்ப்புகள், நிதி நிலைமை என்ன என்பது குறித்து மருத்துவரிடம் தெரிவித்து விடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு ஏராளமான மருத்துவமனைகளில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகின்றன. அதனால் உங்கள் நிலை என்ன என்பதைத் தெளிவாக கூறிவிடுங்கள். டீலக்ஸ் அறையில் தங்கியிருந்தாலும், சாதாரண வார்டில் இருந்தாலும், ஒரே மாதிரியான சிகிச்சைதான் உங்க ளுக்குக் கிடைக்கும். அதனால் எது தேவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 
மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே குடும்ப மருத்துவரிடம் கலந்து பேசி,எந்த மருத்துவமனை சிறப்பானது, சிக்கனமானது என்பதை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.