
நெல்லிக்காய் சாப்பிட்டால் நோய் நொடிகள் இல்லாமல் நலமுடன் வாழலாம்.நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல இவற்றைச் சாப்பிட்டமின் உயிர்ச்சத்து கிடைக்கும். நெல்லிக்காயை உப்பில் போட்டு ஊறுகாயாக ஊறவைத்தாலும், இடித்தாலும், பல நாட்களுக்கு வைத்திருந்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி உயிர்ச்சத்து அப்படியே இருக்கும். இது எந்த பழத்திலும் அமையாத ஒரு தனித்தன்மையாகும்.
நெல்லிக்காயில் ‘டானின்’ என்ற ஒருவகைச் சத்து இருப்பதால்தான், அதில் உள்ள வைட்டமின் சி உயிர்ச்சத்து எந்த நிலையிலும் மாறாமல் இருக்கின்றன.
நோயின்றி வாழ வேண்டுமானால் தினசரி இரண்டு நெல்லிக்காய்களைச் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் கிடைக்காவிட்டால் நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் வடாம். இவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.
தினமும் பெரியவர்களுக்கு 75மி.கிராம் வைட்டமின் உயிர்ச்சத்தும், வளரும் சிறுவர்களுக்கு 30 முதல் 50மி.கிராம் வைட்டமின் சி உயிர்ச்சத்து தேவைப்படுகிறது. தினமும் இரு நெல்லிக்காயை தின்பதிலிருந்து அதை பெற்றுவிடலாம்.
நெல்லிக்காயைத் தினசரி உண்போருக்கு பயங்கரத் தொற்று நோய் பரவாது. நெல்லிக்காயை உண்டு வைட்டமின் சி உயிர்ச் சத்தினால் உரம் பெற்றவர்களின் ரத்தத்தில் கலக்கும் நுண்ணிய தொற்று நோய் கிருமிகள் அழிந்துவிடும்.
நெல்லிக்காயை தேவையான அளவுக்கு சேகரித்து, வற்றல், ஊறுகாய், வடாம் போன்ற முறைகளில் தயார் செய்து வைத்துக்கொண்டு நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் அவற்றைப் பயன்படுத்தலாம். தங்கள் குடும்பத்திலுள்ள முன்னோர். ஒவ்வொருவரும் தினசரி இரண்டு நெல்லிக்காய்களைத் தின்று வந்ததால்தான், நோயின்றி நீண்டகாலம், நரை, திரையின்றி. கண் பார்வைத் தெளிவுடன் வாழ்ந்து வந்தனர்.

