
வாழைப்பூ பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்கும் தெரியாதது தான் முக்கிய காரணம். அடுத்து வாழைப்பூவை எப்படி விரைவாக சமைப்பது என்பது பலருக்கு குழப்பம் உள்ளது.
1. ஆயுர்வேத மருந்து தயாரிப்புகளில் வாழைப்பூ பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
2. கதளி கல்ப ரசாயனமெனும் ஆயுர்வேத மருந்து பெண்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.
3. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை வாழைப்பூ தடுப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
4. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக வாழைப்பூ இருப்பதால் பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ பெரும் துணையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.குறிப்பாக சர்க்கரை நோயால் ஏற்படும் குடல் புண்,சிறுநீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.
6. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் இந் மிகவும் ஏற்றது.

