
சில பெண்களோட முகத்தைப் பார்த்தால், ‘பளபளப்பாக’ இருக்கும். கன்னம் ரெண்டும் கண்ணாடி மாதிரி. ‘என்னதான் செய்யறாங்க, இப்படி பளபளக்க’னு நெனைக்கிறோம். அதற்குச் சில வழிமுறைகள் இருக்கு. நீங்களும்தான் செய்து
பாருங்களேன்.
பால் ஏடு இருக்கா. அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் நன்றாகப் பூசிக்கொண்டு 10 நிமிடம் சென்ற பின்பு இளம் சூடான நீரில் முகத்தைக் கழுவிவிடுங்கள்.
எலுமிச்சம் பழச்சாற்றைப் பால் ஏட்டுடன் கலந்து முகத்தில் பூசி, அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, கடலை மாவினால் முகத்தைத் தேய்க்கலாம்.
தயிர் ஏடு எடுத்து முகத்தில் பூசிக் கொண்டு சிறிது நேரத்திற்குப்
பின்பு முகத்தைக் கடலை மாவு தேய்த்துக் கழுவினால் முகம்
பளபளக்கும்.
தினந்தோறும் ஏதாவது ஒரு பழம்… வாழைப்பழமோ, கொய்யாவோ இல்லை, திராட்சையோ ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டும். சாப்பாட்டில் கீரை, காரட் தினமும் சேர்த்துக் கொண்டால், முகத்தில் பளபளப்புக்கு என்ன குறை, வெள்ளரிக்காய் சாலட் சாப்பிட்டால் இன்னும் நல்லது.
வெள்ளரி-டேட்ஸ்
உடல் அழகுபெற வெள்ளரியை தினசரி பயன்படுத்தலாம்.வெள்ளரியின் முழுப் பயனையும் பெற, அதனைப் பேரிச்சம்பழத்துடன் சாப்பிட வேண்டும். வெள்ளரித் துண்டுகளுடன் பேரீச்சயைக் கொட்டை நீக்கிச் சிறு துண்டுகளாக்கிக் கலந்து சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தைச் சிறிதளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்து அத்துடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து வெள்ளரித் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம். வெள்ளரியை நறுக்கி உடனே சாப்பிட வேண்டும். கண்கள் ஒளி பெறும்; தலைமுடியும் செழித்து வளரும்.
மேனியின் பளபளப்புக்கும், வெளுப்புக்கும்கூட வெள்ளரி துணை செய்கின்றது. சற்று மாநிறமாக உள்ள பெண்கள் தினந்தோறும் வெள்ளரியின் சாற்றை எடுத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனைப் பாலோடு கலந்து தடவலாம். முகத்தில் ஈரப்பசை காயக் காய, சாற்றை மேலும் மேலும் தடவி அரை மணி நேரம் போல் ஆனதும், பயத்தம் மாவு கொண்டு குளிர்ந்த அல்ல வெதுவெதுப்பான நீரில் கழுவினால், மாநிறம் பொலிவுபெற்று சற்று சிவக்கத் துவங்கும். அழகுச் சாதனங்களை அதிகச் செலவில் வாங்கிப் பயன்படுத்துவதை விடவும், பச்சை வெள்ளரி அதிகப் பயனைத் தரும்.
முகம் பளிச்சிட…
நம் நிறத்தை மாற்ற முடியாது என்றாலும், இயற்கையான நிறம் பெறவும், இருக்கும் நிறம் மங்காமல் பார்த்துக் கொள்ளவும் நம் வீட்டிலேயே நல்ல மூலிகைகள் சில உள்ளன.
பால், தேன், உருளைக்கிழங்கு, எலுமிச்சம் பழம் ஆகியவை தான் அவை. இவை நான்கும் சிறந்த ‘ப்ளீச்சிங் ஏஜென்ட்ஸ்’. எலுமிச்சம் பழச் சாறு, தேன் ஆகியவற்றை சாப்பிடுவதும் நல்லது. தினமும் வெளியே தடவுவதற்கும் உபயோகிக்கலாம்.
அரை டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச் சாறு, இரு டீஸ்பூன் பால் பவுடர்… மூன்றையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். முகத்தில் எங்கெல்லாம் கருமை படர்ந்து, நிறம் மங்கியதுபோல் தெரிகிறதோ, அங்கெல்லாம் தடவி, 10 நிமிடம் கழித்து ‘சில்’லென்ற தண்ணீரில் முகம் கழுவுங்கள்.இதை தினமும் செய்து வந்தால், முகத்தின் கருமை மறைந்து பளிச்சென்றிருக்கும். வெள்ளரிக்காயைத் தோல் சீவி, அரைத்துச் சாறெடுத்து, அதோடு வெள்ளரி விதை கொஞ்சம் சேர்த்து அரைத்து, அந்த விழுதை முகத்தில் தடவிக் கழுவினாலும் நல்ல பலன் தெரியும்.

