கன்னிப் பெண்ணாக இருக்கும்போது கொடி போல இருக்கும் பெண்கள், மணமாகிக் குழந்தை பெற்ற பின்பு இடுப்புப் பெருத்துப் போய்விடுவார்கள். 
 
உடல் பழையபடி ஒல்லியாகவும், கொடி போல இருக்கவும் என்ன செய்வது என்று புலம்புவதைவிட இந்த யோசனைகளை செய்து பாருங்கள்.
 
வீட்டு வேலைகள் எவ்வளவு இருந்தாலும் உடல் பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். வெளியில் அரை மணி நேரம் நடக்கலாம். வீட்டிலேயே செய்ய வேண்டுமென்றால் ஸ்கிப்பிங் நல்ல பயிற்சி. ஜாகிங் போவதை விடவும் வேகமாக நடக்கலாம்.
 
சிலர் பயிற்சியும் செய்துவிட்டு, நெய்யும், தயிரும் வெண்ணெயுமாகச் சாப்பிடுவார்கள். பயிற்சியோடு டயட்டும் ரொம்ப முக்கியம், கலோரிகள் எவ்வளவுக்கு எவ்வளவு உள்ளே போகிறதோ அத்தனையும் உடம்பு உழைப்பிலே செலவழிக்கணும், இல்லையோ, ஊளைசதைதான்; இடுப்பு பெருத்துவிடும். அடிக்கடி மோர் குடித்து, கொழுப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட்டுப் பயிற்சியும் செய்தால் பிறகு என்ன கொடி உடம்புதான்.