னக்கு வயது 69.மூட்டு வலி அதிகமாக உள்ளது.எலும்பு சூப் குடித்தால் நல்லது என்று ஒரு டாக்டர் சொன்னார்.எலும்பு சூப் எப்படி தயார் செய்வது?வேறு மருந்துகள் தேவைப்படாதா? -கோ.பழனிச்சாமி, திருவாரூர்.

மூட்டு வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம்.எலும்பு சூப் உடலுக்கு குறிப்பாக மூட்டுகளுக்கு நல்லது.  சூப்பை ஆட்டுக்கால் பாயா என்றும் சொல்வார்கள்.எலும்பு மஜ்ஜை உலகின் மிக ஆரோக்கிய உணவுகளில் ஒன்று.கடும் காய்ச்சல், டைபாய்டு வந்து மிக ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிக்கன் சூப் கொடுத்து உயிர் பிழைக்க வைப்பார்கள்.

எலும்புகளில் உள்ள சிஸ்டைன் எனும் அமிலோ அமிலம் கடும் சளியையும் இளக வைத்திருக்கும் தன்மை கொண்டது.எத்தனை கடுமையான நெஞ்சு சளி, மார் கட்டுதல் இருந்தாலும் எலும்பு சூப் கொடுக்க சளி இளகி வெளியேறிவிடும்.

எலும்புகளில் இருக்கும் கால்ஷியமும், மக்னீசியமும் நம் எலும்புகளுக்கும் பல்லுக்கும் வலு சேர்ப்பவை. அத்துடன் எலும்பு மஜ்ஜையில் உள்ள கார்டிலேஜ் (cartilage), கோன்டோட்ரைன் சல்பேட் (Chondroitin sulfate), க்ளுகோஸமின் (Glucosamine) எல்லாம் இன்று விலை உயர்ந்த மாத்திரைகளாக கடைகளில் விற்கப்படுகின்றன.தீராத மூட்டுவலி,ஆர்த்ரைட்டிஸ் வந்தவர்களுக்கு மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் முதல் சப்ளிமெண்ட் க்ளுகோஸமின் தான்.

அத்துடன் பெருங்குடல் பிரச்னை வராமல் தடுப்பதற்கும், வந்ததை குணமாக்கவும் எலும்பு மஜ்ஜையில் உள்ள ஜெலடின் உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

பாயாவுக்கு தேவையான எலும்புகள் அனைத்து கறிகடைகளிலும் கிடைக்கும். இதில் முக்கியம் என்னவெனில் மித வெப்பத்தில் மணிக்கணக்கில் வேக வைக்க வேண்டும்.நீண்ட நேரம் வெந்தால்தான் எலும்புகளில் உள்ள ஜெலட்டின் க்ளுக்கோஸமின் எல்லாம் சூப்பில் இறங்கும்.

எலும்பு சூப் சாப்பிடலாம், ஆரோக்கியமாக வாழலாம்…