
உலகமெங்கிலும் மூலிகை மருத்துவப் பொருட்களின் விற்பனை சந்தை ஆச்சரியங்களை ஏற்படுத்திவருகிறது . அவற்றின் வருவாய், மிகப்பெரிய வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது . உள்நாட்டு விற்பனையிலும் சத்தமில்லாமல் அமைதி புரட்சியை நிகழ்த்தி வருகிறது.
தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் இதற்கான விதை ஊன்றப்பட்டு அதன் காரணமாக தென்னிந்தியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் கடலூர் தி சுசான்லி குழுமமும் அதனை உருவாக்கிய டாக்டர் சி.ஏ.ரவியும், பேராசிரியர் உஷா ரவியும் என்பது நிகழ்கால சரித்திரம். தி சுசான்லி குழுமத்தின் இடைவிடாத முன்னெடுப்புகளினால் பாரம்பரிய மருத்துவம் மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மூலிகை மருந்துகள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்தது.
பெரும்பாலான நோய்களுக்கு பக்கவிளைவுகளற்ற நிரந்தர தீர்வுகளை மூலிகை மற்றும் ஆயுர்வேதிக் மருந்து பொருட்கள் அளிப்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.மேலும் நோய்கள் வராமல் தடுப்பதிலும் அவற்றின் பங்களிப்புகளை மக்கள் நன்கறிந்தனர். செலவு குறைந்த மூலிகை வைத்தியம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்ததன் காரணமாக மூலிகை மருந்து பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகத் தொழில்துறையில் சாதனை வளர்ச்சி தொடங்கியது.
தி சுசான்லி குழுமத்தால் வீ ஹெர்பல் கேர் (VEE HERBAL CARE ),மருந்து உற்பத்தி நிறுவனம். மிகத் துல்லிய ஆய்வுகளின் அடிப்படையில் மூலிகை மருந்து பொருட்கள், ஆயுர்வேதிக் மருந்து பொருட்கள்,உணவு பொருட்கள், சர்வதேச தரக்கட்டுப்பாட்டளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இவைகளின் உருவாக்கத்தில் தரக் கட்டுப்பாடு மற்றும் சரிபார்ப்பு ஆகியன மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஆயுர்வேதிக், மூலிகை மருந்துகளும் உணவு பொருட்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நோய்கள் எதுவாகினும் அதற்குரிய சிறந்த தீர்வுகளை வழங்கி வருவதால் நிறுவனத்தின் மருந்து விற்பனை சந்தை சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது. பெரும்பாலான மக்கள் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதால் மேலும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது .
மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து,நோய் தடுப்பு,ஆரோக்கிய பராமரிப்பு, இவற்றுடன் தோல் பராமரிப்பு,முடி பராமரிப்பு , நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான மூலிகை உணவுப் பொருட்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.
ஹெர்பல் மருந்து பொருட்கள் மற்றும் மூலிகைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது.
இது குறித்து மேலாண்மை இயக்குநரும் நிறுவனத் தலைவருமான டாக்டர் சி.ஏ.ரவியும், இணை நிறுவனர் பேராசிரியர் டாக்டர் உஷாரவி, இயக்குனர் டாக்டர் பானுபிரியா அவர்களும் இது பற்றி கூறுகையில் “உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,சுமார் 21,000 தாவர இனங்கள்,மருத்துவ குணங்களுக்கு விருப்பமான இரசாயன கூறுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் மூலிகை ஆயுர்வேதிக் மருந்து பொருட்கள் கட்டுமானம் உலகில் ஏற்படுத்தப்படும். எதிர்கால உலகம் இவற்றை சுற்றியே சுழலும்.
இதனை நாம் முன்னரே கணித்து செயல்பட்டதன் விளைவாக மூலிகை மருந்து பொருட்கள் மற்றும் உணவுபொருட்களின் உள்நாட்டு விற்பனை வணிகத்தில் நாம் சிறப்பான நிலையை அடைந்துள்ளோம்.
இந்நிலையில் சாதிக்கும் எண்ணமுடைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களின் வாழ்வில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளோம்.
கடந்த 33 வருடங்களாக ஆரோக்கியம் சார்ந்த தொழிலில் முன்னோடியாக உள்ள எங்களது தி சுசான்லி குழுமம் அடுத்த கட்ட பயணத்திற்கான புதிய பாதையை அமைக்கின்றது.
அதன் முதற்படியாக வரும் 2027 ஆண்டிற்குள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் விற்பனை மையங்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள்,சில்லறை விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளன.மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர்கள், ஸ்டாக்கிஸ்டுகள், ஆன்லைன் விற்பனையாளர்களுககு அருமையான தொழில் வாய்ப்புகளை வழங்க உள்ளோம். உங்களின் பெயரில் உங்களின் மார்க்கெட்டிங் முகவரியில் பொருட்களை நாங்கள் சிறப்பாக தயாரித்து தரவுள்ளோம்.
அவரவர்களுக்கு தேவையான முதலீட்டில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதற்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.முழு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமாக மாபெரும் மூலிகை பொருட்கள் வணிகத்தில் இளைஞர்கள் முத்திரை பதித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதுடன் தங்களின் எதிர்காலத்தையும் செழிப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.
அதற்கேற்றவாறு சந்தையில் ஆயுர்வேதிக், மூலிகை மருந்து பொருட்கள்,உணவு வகைகள் விற்பனையும் மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதன் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 11/12/2025 தேதியன்று நேரடியாக அரை நாள் பயிற்சியினை கடலூர் எங்களது தி சுசான்லி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது முன்பதிவு செய்து கலந்து பயன்பெறவும்.
மருந்து விற்பனை மட்டுமல்லாமல் மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு, நறுமணப் பயிர்கள், மூலிகை பயிர்கள், ஆகியவற்றிற்கான வாய்ப்புகளையும் கிராமப்புற விவசாயிகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வு மட்டுமின்றி வாழ்வில் சாதிக்க நினைப்பவர்களுக்கும் தி சுசான்லி குழுமம் மிகப்பெரிய வாசலை திறந்து வைத்திருக்கிறது”” என்று கூறினார்கள் டாக்டர் சி.ஏ.ரவி, மற்றும் டாக்டர் உஷா ரவி.
தகவல் தொடர்புக்கு;
HERBO TRENDS,
(முதல் தளம்),
நெ.24. ராஜகௌரி நகர்,
மதி கிருஷ்ணாபுரம்,
பாகூர் கொம்யூன்,
புதுச்சேரி – 607402
செல் : 96003 09546, 93676 22256.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)

