மனிதனின் அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலை,கோபம்,எரிச்சல்,மன உளைச்சல்..இவற்றால் உருவாகும் உணர்ச்சி மாற்றங்கள், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீர் மற்றும் அமிலம் முதலியவற்றின் அளவை அதிகரிக்கும். மன உணர்ச்சிகள் மூளையைத் தாக்குகின்றன. மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸின் (Hypothalamas) முன்புறம் தூண்டப்படும்போது, ‘வேகஸ்’ நரம்பு தூண்டப்படுகின்றது. இதன் காரணமாக இரைப்பையில் சுரக்கும் அமிலம் மற்றும் ஜீரண நீரின் அளவும் அதிகரிக்கின்றது.
 
ஹைப்போதலாமஸின் பின்புறம் உணர்ச்சிகளால் தாக்கப்பட்டால், நாளமில்லாச் சுரப்பிகளில் முதன்மையான ‘பிட்யூட்ரி’யின் முன்புறம் தூண்டப்பட்டு, அட்ரினல் சுரப்பியின் இயக்கம் அதிகரித்து அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இதனால், ஜீரண நீரும் அமிலமும் இரைப்பை மற்றும் குடலில் அதிகமாகச் சுரக்கத் தொடங்கும். இதுதான் வயிற்றுப்புண் ஏற்பட முக்கியக் காரணம்.
 
அல்சருக்கு மனம்தான் காரணம் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? மனசு நல்லா இருந்தா மத்ததெல்லாம் நல்லா இருக்கும்னு, பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!