விவசாய வசாய நாடான இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தைத் திருநாள் என்று காரணப் பெயர் வைத்து அழைப்பதோடு, விவசாயத் திருநாள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். தொடக்கத்தில் சூரியனை வணங்கத் தொடங்கி, பின் சூரியன் துணையால் கிடைத்த அறுவடைப் பொருட்களை ஆதவனுக்கே படைத்து நன்றி தெரிவித்து, அடுத்து விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு நன்றி உரைக்கும் விழாவாக உருவெடுத்திருப்பது பொங்கல் பண்டிகையின் வரலாற்றுப் பாதை.
 
பொங்கல் பண்டிகையானது இனிப்பு மிகுந்த சர்க்கரைப் பொங்கல், கிராமம், பாரம்பரியம் என சூரியன், தொடர்பு கொண்டிருந்தாலும், கரும்போடு பலவற்றோடு அதற்கு இருக்கும் பிணைப்பு அதிகம். பொங்கல் என்றதுமே, அனைவரது நினைவிலும் சட்டென சற்றே கரும்பாகத் தான் இருக்கும். சிறப்பு மிக்க உதிப்பது கரும்பின் அருமை பெருமைகளை அறிந்து கொள்வது முக்கியம்.
 
இனிமை தரும் கரும்பு:
 
கோரை மற்றும் கடைவாய்ப் பற்களால் கரும்பைக் கடித்து, அதன் மேல் தோலை சரேலென இழுத்து, நடுமத்தியை நறுக்கென கடித்து, அதிலிருந்து வெளியாகும் கருப்பஞ்சாறினை சுவைத்து, சக்கையை துப்பி கரும்பின் இன்சுவையை ருசிக்காவிட்டால் பொங்கல் பண்டிகை முழுமையடையாது. 
 
கரும்புச் சாறின் பயன்கள்:
 
சங்ககாலத்தில் பயிர்களுக்கு வேலியாக கரும்புகள் பயன்பட்டதாக புறநானூறு பதிவுசெய்கிறது. பயிர்களுக்கு வேலியானதைப் போலவே, நோய்கள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கும் வேலியாகவும் கரும்பு பயன்படும். ‘செங்கரும் பதனற்சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்’ என்ற அகத்தியர் குணவாகட பாடல்வரி, உடலில் தோன்றும் பித்தத்தைக் குறைக்க கரும்புச்சாறு அற்புதமான மருந்து என்பதை பறைசாற்றுகிறது. அக்காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கு, கரும்புச் சாறினை அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது. குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, அழுகலகற்றி என கரும்பிற்கு பல்வேறு செய்கைகள் இருப்பதாக சித்த மருத்துவம் தெளிவுப்படுத்துகிறது. உடலில் தோன்றும் எரிச்சலுக்கு, கருப்பஞ் சாறோடு தயிர் அல்லது மோர் சேர்ந்து பருக, விரைவில் நிவாரணம் கிடைக்கும்! இனிப்புச் சுவை இருப்பதால், உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் பானமாகவும் கரும்பிலிருந்து உருவாகும் சாறினை பயன்படுத்தலாம். செம்பு பற்பம் எனும் முக்கியமான சித்த மருந்து தயாரிக்க கரும்பு பயன்படுகிறது. விடாத விக்கல் பாடாய்ப்படுத்தும் போது கரும்புச்சாறு துணை நிற்கும்.
 
செரிமானம்… சிறுநீரகம்:
 
செரிமானத்தை அதிகரிக்க கரும்பினை பயன்படுத்தலாம். செரிமான நொதிகளின் (Digestive enzymes) செயல்பாடுகளை அதிகரிக்கிறது கரும்புச்சாறு. செரிமானத்தை கெடுக்கும் பன்னாட்டு பானங்களுக்கு மத்தியில், கரும்புச்சாறு செரிமானத்தை உறுதியாக அதிகரிக்கும். ஈரல்தேற்றியாக செயல்பட்டு, கல்லீரலுக்கு ஊட்டமாக அமைகிறது. சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும். சிறுநீர்ப்பாதையில் கிருமி சஞ்சாரம் ஏற்படாதவாறு பாதுகாக்கும். ருசித்தவுடன் உடனடியாக ஆற்றலைக் கொடுத்து புத்துணர்வுடன் செயல்பட வைக்கும்.
 
சுண்ணச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாஷியம் போன்ற  துச்சத்துக்களையும், அமினோஅமிலங்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. எதிர் அதிகம். ஆக்ஸிகரணிப் பொருட்களும் (Anti-oxidants) கரும்பில் இனிப்புச் சுவையுடன் இருந்தாலும் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை உயர்த்தாது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் வாந்தியை குறைக்கவும் அரை டம்பளர் கரும்புச் சாறு பருகலாம். புத்தாண்டில் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ வாழ்த்துகள்.
– டாக்டர்.வி.விக்ரம்குமார்.,MD