அகிலா காமராஜ்

சமுதாயம் என்ற வார்த்தையை கடந்து செல்லும்போது இளைஞர்களை கடந்து சென்றுவிட முடியாது. சமீபத்தில் பொங்கல் திருநாள¬ கொண்டாடி முடித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மேற்கொண்ட ‘மெரினா புரட்சி’யை யாராலும் மறந்துவிட முடியாது. சில கணத்திலேயே சில தினங்களிலேயே மிகப் பெரும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்ததற்கு சமூக வலைத்தளத்தின் பங்கு அளப்பரியது.

தற்போது ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும்போது தாங்கள் இன்னார் மகன் (அ) மகள் என்றோ, தன் கல்வித்தகுதி இதுவென்றோ சொல்வதில்லை. மாறாக தான் இன்ன பெயரில் சமூக வலைத்தளத்தில் உள்ளேன் அல்லது தங்களின் கைப்பேசி எண்ணை பரிமாறிக் கொள்வது ªன்ற ரீதியிலேயே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதைந்த நிலையில் தங்கள் கருத்தை வெளியிடுவதற்கும், தங்கள் மனக்குறையை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாக செயல்படுகிறது. மாற்றம் என்பதன் வழி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘நகர்தல்’ என்ற கோட்பாடே மனிதனின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அதனால் தான் கற்காலம் என்ற காலத்தில் இருந்து இன்று இணையத்தின் காலத்தில் மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு நல்ல விஷயங்களை எதிர்நோக்கும்போது சில எதிர்மறை விளைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும். அந்த விதத்தில் சமூக வலைத்தளம் மக்களை ஒருங்கிணைத்தாலும் ஒரே குடும்பத்தினரை தீவுகள் போல மாற்றி உள்ளது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து உணவருந்தும் வேளையில் அனைவரின் கையிலும் கைப்பேசி இருந்தால் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. அவரவர் கைப்பேசி மூலம் மற்றவர்களிடையே குறுஞ்செய்தி அனுப்பும் மும்முரத்தில் தன் எதிரே இருக்கும் குடும்பத்தினரை மறந்து விடுகின்றனர்.

‘டிக் டாக்’ என்ற செயலி தற்போது பிரபலமாகி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்கிறது இந்த தளம். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் உள்ள எல்லைக்கோட்டை மக்கள் மறந்து விடுகிறார்கள். வரம்பு மீறிய அசைவுகள் கருத்துக்கள் என்ற இந்த மக்களின் போக்கு அச்சத்தையே உண்டு பண்ணுகிறது.

உரையாடல் ªன்ற ஒரு விஷயமே மக்களிடம் மறந்துபோய் விட்டது. வீட்டில் உள்ள மூத்த குடிமக்களிடம் அளவளாவுவது, அவர்களின் அனுபவங்கள் மூலம் நம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வது, அவர்களிடம் ஆலோசனை கேட்பது என்ற வழக்கமே தற்போது மறைந்து  “One Touch World” என்று ரீதியில் எல்லாமே விரல் நுனியில் கிடைத்துவிடும் என்ற தற்போதைய இளைஞ்ரகளின் மனப்பான்மையை சீர்திருத்திக் கொண்டு வரவேண்டும்.