ரியாகப் பல் துலக்காமல் இருப்பது,உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்கள். நாம் சாப்பிடும்போது உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும்போது, அவற்றில் வளரும் பாக்டீரியாக்களால் உணவுத்துகள்கள் அழுகும்.அப்போது அவற்றில் சல்பர் (கந்தகம்) உருவாகும். இதனால், துர்நாற்றம் வீசும்.

பற்களில் சொத்தை இருந்தாலும், பல் ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புண் இருந்தாலும் துர்நாற்றம் வரும். பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகமுள்ளவர்களுக்கு உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சொருகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.இவர்கள் ‘இன்டர் டென்டல்’ பல்துலக்கியைப் பயன்படுத்தினால் உணவுத் துகள்கள் வெளியில் வந்துவிடும். தரமான ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் மறையும். அதைவிட முக்கியம், பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது.