நாம் பேசும் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு; உணர்வும் உண்டு.ஆறுதலான நல்ல வார்த்தைகள் அருமருந்து.கசப்பான வெறுப்பான வார்த்தைகள் விஷத் தன்மை கொண்டவை.

பொதுவாக ஒருவர் தான் விரும்பியதையெல்லாம் சொன்னால் பின் தான் விரும்பாதவற்றைக் கேட்க நேரிடும். சாமர்த்தியத்துடன் இருங்கள். சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதும், எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று அறிந்திருப்பதும் சாமர்த்தியம் ஆகும். இது என்ன சொல்ல வேண்டும் என்பதையும், எதைச் சொல்லாமல் விட வேண்டும் என்பதையும் அறிவது என்று அர்த்தமாகும். சாமர்த்தியம் இல்லாத திறமை எப்போதுமே விரும்பத்தக்கதல்ல.

சொற்கள் உறவு முறைகளைக் கெடுத்துவிடும். நிறைய பேர் எந்தவொரு இயற்கை அழிவுகளாலும் புண்படுவதைவிட பொருந்தாத வகையில்

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால்தான் அதிகம் புண்படுகிறார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்ததைச் சொல்வதைவிட நீங்கள் சொல்வதைத் தேர்ந்தெடுங்கள். அதுவே ஞானத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். அதிகப்படியான பேச்சு என்பது கருத்துப் பரிமாற்றம் என்று பொருளாகாது. 

குறைவாகப் பேசுங்கள்; அதிகம் சொல்லுங்கள். ஒரு முட்டாள் சிந்திக்காமல் பேசுகிறான்; ஓர் அறிவாளியோ பேசுவதற்கு முன் சிந்திக்கிறான்.

கசப்புடன் பேசப்படும் வார்த்தைகள் சரிசெய்ய முடியாத அழிவை ஏற்படுத்தும். பல சமயங்களில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் பேசுகின்ற விதமே குழந்தைகளின் மனநிவையை நிர்ணயம் செய்கிறது.

எனவே கனிவான இனிமையான வார்த்தைகளை பேசுங்கள்.எல்லோரும் உங்களை மதித்து கொண்டாடுவார்கள்.