டாக்டர் வி.சிவக்குமார்,ஆர்த்தோ சிறப்பு நிபுணர்.

சென்னை, மடிப்பாக்கம்,உள்ளகரம் பகுதியில் உள்ள சிவம் மருத்துவமனை 82 வயது மூதாட்டிக்கு மிகவும் வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது.இவர் கடந்த 6 மாதங்களாக இடது பக்க இடுப்பு பகுதியில் கடுமையான வலி காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.இவரை பரிசோதித்ததில் இடுப்புப் பகுதி எலும்புகள் தேய்மானம் காரணமாக தொடைப் பகுதி வலுவிழந்திருப்பது கண்டறியப்பட்டது.

13 ஆண்டுகளுக்கு முன்பு இடுப்புப் பகுதியில் முறிவு ஏற்பட்டதற்காக நோயாளி திருமதி.சித்ரா அறுவை சிசிக்கை செய்திருந்ததும் தெரியவந்தது. இப்போது அவருக்கு இடுப்பு பகுதி மாற்று சிகிச்சை செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றும் அதுதான் எலும்புகளுக்கு வலுவை அளிக்கும் என்றும் பரிந்துரைத்தனர்.

*மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வி. சிவக்குமார் தலைமையில் முட நீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் இப்போது வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் தனது வழக்கமான பணிகளைச் செய்ய முடியும்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் முதுகலை நிபுணரான டாக்டர் வி. சிவகுமார் கூறியதாவது:

மிகவும் தீவிரமாக அவதிப்பட்டு வந்த இவரின் இடுப்புப் பகுதியில் மாற்று அறுவை சிகிச்சை செய்வதென முடிவு செய்ப்பட்டது. ஏற்கெனவே வயது முதிர்வு காரணமாக அவரது உடலில் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சினைகள் எங்களது அறுவை சிகிச்சைக்கு மிகவும் சவாலாக இருந்தன.அத்துடன் உள்புறம் மென்மையான சவ்வுகள் கிழிந்திருந்ததும் பெரும் சவாலாக இருந்தன. இடுப்புப் பகுதியில் மாற்று மூட்டு மற்றும் எலும்புத் தேய்மானத்திற்கும் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்கு குணமடைந்து வருகிறார், என்றார்.

இடுப்பு மாற்று சிகிச்சையில் அவரது இடுப்புப் பகுதியில் உள்ள எலும்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிதாக செயற்கை எலும்புகள் பொறுத்தப்பட்டுள்ளன. இது அவர் வலியிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கும். புதிய எலும்புகள் அவர் மீண்டும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள வசதியாகவும்,நீண்ட காலம் செயல்படக் கூடியதாகவும் இருக்கும்.

இது போன்ற சிகிச்சை எல்லா தரப்பு முதியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

-பவித்ரன்.