– Er. M. பிரசாத் B.E.,, (Civil)

 சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமம் எனது சொந்த ஊர். எங்கள் முன்னோர்கள் நிறைய நிலங்களுக்கு அதிபதியாக விவசாயம் செய்துவந்தனர். எங்களுக்கு இன்று சொற்ப நிலம் உள்ளது. மரபின் வழியாக எனக்கு ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட்டது. அப்பா, அம்மா, அக்கா அடுத்து நான் என அளவான குடும்பம். கட்டுமானத் துறையில் பொறியாளராக பட்டம் பெற்று தொழில் செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தின் தந்தை என அழைக்கப்பட்ட நம்மாழ்வார் அவர்களின் பிரச்சாரம் மற்றும் அவர் விஞ்ஞான ரீதியாக கண்டறிந்து வெளிப்படுத்திய சாராம்சங்களின் உண்மைத்தன்மையை அறிந்து ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் இயற்கை விவசாயத்தில் 2013 ஆம் ஆண்டில் ஐக்கியமானேன்.

என்னுடன் பாண்டியன் மற்றும் பிரபாகரன் கூட்டாக சேர்ந்து புதிய வேர்கள் அமைப்பைத் துவக்கினோம். வாரத்தில் ஒருமுறை இயற்கை விவசாயத்தைப் பற்றி கூட்டம் நடத்தினோம். நாளடைவில், 15 நபர்கள் கொண்ட குழுவாக உருவானது. இதில் பாண்டியன் தன்னுடைய ஐடி நிறுவன பணியை விட்டு விட்டு விலகி அவரின் இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய முன்வந்தார். பிரபாகரனின் செயல்பாடும் அதற்கு ஏற்றதாக அமைந்தது. ஆக மொத்தத்தில் ஐந்து நபர்கள் ஆர்கானிக் உற்பத்தியில் மும்முரம் காட்டினர். மீதமிருந்தோர் உற்பத்தியாகும் விளை பொருட்களை வாங்கிக் கொள்வதாக பதிவு செய்துகொண்டார்கள்.

அன்றைய நாட்களில் இயற்கை உரங்களை எருவாக்கி விவசாயம் செய்த நம் முன்னோர்கள் திடமான மற்றும் சத்து நிறைந்த உணவு தானியங்களையும்  இன்ன பிறவற்றை உற்பத்தி செய்தார்கள். அவற்றை உண்டு நோயற்று வாழ்ந்தனர். விவசாய நிலத்தின் மண்ணில் இயற்கையிலேயே நுண்ணுயிர்கள் இருக்கின்றன. குறுகியகால சாகுபடி இன்னபிற காரணங்களால் இரசாயன உரங்கள் தெளிப்பான்கள் பயன்படுத்த மண் வளத்தில் இயல்பு தன்மைக்கு எதிராக அவை செயல்பட்டன. அத்தகைய உரம் மற்றும் மருந்துகளின் மூலம் விளைச்சல் கண்ட பொருட்களில் அவற்றிற்குரிய இயல்புத்தன்மை வீரியம் மற்றும் சத்துக்களில் குறைபாடுகள் அதிகமாகியது. பல்வேறு நோய்களுக்கும் ஆளாகினர்.

நம்மாழ்வார் எடுத்துச் சொல்லிய வழியை பின்பற்றும் எங்கள் ஆர்வலர்கள் குழு, இயற்கை உரத்தின் மூலமே சத்து நிறைந்தவையாக விளைச்சல் காண்கிறோம். மண்வளம், நீர்வளம் போதிய அளவிற்கு இருக்க வேண்டியது அவசியம். உழவுக்குப்பின் பல தானியங்களை விதைத்து அதாவது எண்ணெய் வித்துக்கள், தானியப் பயிர்கள், உரப்பயிர்கள், வாசனைப் பொருட்கள் என தேர்வு செய்து வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் ஒரு சென்ட் நிலத்தில் போதிய இடைவெளி விட்டு நட்டு விளைச்சல் காணப்படுகிறது.

நிலக்கடலை, சூரியகாந்தி, கம்பு, ராகி, திணை சினைப்பைத் தாவரம் (அதிகளவு Hydrogen உற்பத்தி செய்யக் கூடியது) கொத்தமல்லி, கடுகு எதெது விளைச்சலுக்கு தேவையோ அதற்குரிய விதைகள் செடிகள் மற்றும் நாற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ அளவு தேவைப்படும். இவற்றில் 40 முதல் 45 நாட்களில் சில 60 நாட்களில், மேலும் சில 90 நாட்களில் வளர்ச்சி காணும். அவற்றை அப்படியே அந்த நிலத்திலேயே மக்கள் விட்டு உரமாக செய்கிறோம். அப்படி ஒரு வருட காலத்திற்கு மூன்று முறை செய்யப்படுகின்றன. காய்கறிகள், கீரைவகைகள் அவற்றிற்குரிய இயல்புத்தன்மைபடி விளைச்சல் காணும். உதாரணத்திற்கு தக்காளி நட்ட 20 -25 நாட்களில் ஓரடி உயரம் வளர்ந்த பிறகு அதன் கீழ் வெங்காயம் ஊடுபயிராக விளைவிக்கப்படுகிறது. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பக்கங்கள் நீளும்.

ஆரம்பத்தில் 15 நபர்களாக செயல்படத் துவங்கி இன்று 120 நபர்கள் என அதிகரித்துள்ளது. எங்களின் இயற்கை விவசாய பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவற்றிற்கான விற்பனைக்கூடம் குடோன் மற்றும் சந்தைப்படுத்துதலில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம். உள்ளூர்வாசிகளுக்கு அவர்களின் தேவை/ அவசரத்திற்கு ஏற்ப உடனே வழங்குகிறோம். தினவிற்பனை, வார விற்பனை என அதிகரிப்படுவதோடு, தேவைப்படும் பொருட்களும் எண்ணிக்கையில் அதிகமாகும் பட்சத்தில் எங்களின் சுய விளைச்சலுக்கு மேலாகும்போது, சுமார் 30 விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்கிறோம்.

எங்களின் புதிய வேர்கள் விற்பனைக்கூடம் சேலம் மற்றும் சென்னையில் இயங்குகிறது. ஏற்கனவே 2 வருடங்கள் கேளம்பாக்கத்தில் நடத்தி வந்தோம்.  ஜனவரி 30ம் தேதி 2020இல் இப்போதுள்ள விலாசத்தில் இயங்கி வருகிறோம். சென்னைவாசிகள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளோரின் ஆர்டர்களுக்கு இலவசமாகவே வீட்டிற்கே சென்று வழங்குகிறோம்.

எங்களின் பாரம்பரியமிக்க அரிசியின் மருத்துவப் பயன்கள்:

கருப்புக்கவுனி- புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். மாப்பிள்ளை சம்பா- நரம்பு உடல் வலுவாகும். ஆண்மை கூடும். சுகப்பிரசவமாகும். தாய்ப்பால் ஊறும். கருங்குருவை- இழந்த சக்தியை மீட்கும். சீரகச்சம்பா- அழகு தரும். எதிர்ப்பு ஆற்றல் வரும். கிச்சலி சம்பா- இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம். இவற்றுடன் சேர்ந்து மொத்தம் 24 அரிசி வகைகள் விற்பனையில் உள்ளன. அதேபோல பாரம்பரியமிக்க பருப்பு வகைகள் மற்றும் (மலை)தேன் மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டுச்சக்கரை, பனங்கற்கண்டு வகைகள் அவற்றுடன் ஏராளமான மூலிகைகள் நீண்ட பட்டியல் உள்ளன. மற்றும் மூலிகை நாப்கின்களையும் விற்கிறோம்.

சென்னை, கோவை பெங்களூரு, ஹைதராபாத், பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு அவர்களின் மாதத்திற்கான ஆர்டர்களை போக்குவரத்து சர்வீஸ்கள் மூலம் அனுப்பி வைக்கிறோம். சென்னையிலிருந்து மேலும் வியாபார அபிவிருத்தி செய்யவே…

புதிய வேர்கள் எண் 7, ராமநாதன் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை- 600034 விலாசத்தில் இயங்குகிறது.

தொடர்புக்கு சேலம்  996552318 6, சென்னை 9444222921