கடலூர் டாக்டர் உஷா ரவிக்கு விருது!
 
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் தி சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேதிக் கிளினிக் டாக்டர் உஷா ரவிக்கு சமீபத்தில் புதுச்சேரி மாநில ஆளுநர் திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆயுஷ் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கி சிறப்பித்து இருக்கிறார்கள்.
 
இந்த விருது கிடைத்தது பற்றி டாக்டர் உஷா ரவியிடம் ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ் சார்பாக பேசினோம். அவரது பேட்டியிலிருந்து…
 
கொரோனா காலத்தில் ஆரோக்கியமான வாழ்வு …நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை உலகமே அறிந்து கொண்டது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.யாருமே நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை சந்தித்தோம்.இந்த பேரழிவிலிருந்து மீண்டுவர  உதவக்கூடியது இயற்கை மருத்துவமே. 
 
கடந்த 29 ஆண்டுகளாக மருத்துவ உலகில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். 14 வகையான இயற்கை வழி சிகிச்சை முறைகளை கற்று பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதால்..மக்கள் நலமுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதைக் கண்டு மேலும் மேலும்  உற்சாகமாக பணியாற்றி வருகிறேன் நோய்களுக்கான தீர்வு என்பது மருந்து மாத்திரைகளில் மட்டும் இல்லை. இவற்றை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல. பக்கவிளைவுகளும் உண்டு.
சமீபகாலமாக மக்கள் வலிக்கு தீர்வு தேடி அலைகிறார்கள். மூட்டு வலி ,இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி, நரம்பு பாதிப்பு பிரச்சனகளுக்கு அக்குபஞ்சர் ஸ்டோன் அரோமாதெரபி மற்றும் காந்த சிகிச்சை முறைகளில் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.
ஒவ்வொரு நோயாளியின் நாடியைப் பார்த்து அவரின் குணாதிசயம், நாடி குறைபாடு, உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து சிகிச்சை அளிப்பதால் நல்ல பலன் கிடைக்கிறது.
 
கண் கருவளையம், முகப்பரு, முகப்பொலிவு இன்மை ,மரு, மங்கு போன்றவற்றிற்கும் அரோமா காஸ்மெட்டிக் அக்குபஞ்சர் சிகிச்சை முறை நல்ல பலனை தருகிறது. முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை, முடி உடைதல், இவைகளுக்கு மிகச் சரியான காரணங்களை காஸ்மெடிக் அக்குபஞ்சர் முறையில் கண்டறிகிறோம்.பிறகு ஹேர் அனாலிசிஸ் கருவி மூலம் பரிசோதித்து ஹேர் மசாஜ் செய்வதோடு சரியான ஊட்டச்சத்துக்கான ஆலோசனையும் வழங்கி வருகிறோம்.
 
திருமணமாகும் தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது உயிர் நாடி போன்றது.எதார்த்த வாழ்வில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.நான் கற்றுத் தேர்ந்துள்ள14 வகையான இயற்கை முறை சிகிச்சையினால் பலருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. அவர்கள் நேரில் வந்து மகிழ்ச்சியோடு நன்றி சொல்லும் போது ஒரு மருத்துவராக எனக்கு கிடைக்கும் மன நிறைவுக்கு அளவே இல்லை.தினம் தினம் உற்சாகமாக உணர்கிறேன் என்றார் டாக்டர் உஷா ரவி.அவரது சேவையை பாராட்டி விடை பெற்றோம்.
 
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேதிக் கிளினிக்
11,பாரதிதாசன் தெரு, பிள்ளையார்கோவில் தெரு,
மஞ்சக்குப்பம், கடலூர்-607 001
93676 22256
சந்திப்பு:பவித்ரன்