பிரசவம் என்பது தாய்க்கு மறுபிறவி.பத்து மாதம் சுமந்து குழந்தையை பெற்றெடுக்கும் போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.முன்பு போல் இயற்கையான இயல்பான பிரசவம் அரிதாகிவிட்டது.

பாதிக்குமேல் சிசேரியன்தான்!? எது எப்படி இருந்தாலும் குழந்தை பெற்ற பின் தாய்க்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது.

பிரசவம் முடிந்த மறுநாளே சொந்த பந்தங்கள் வரிசைகட்டி மருத்துவமனைக்கு வருவது தாய்க்கு நல்லதல்ல.மருத்துவ மனைக்கு மிகச் சிலர் மட்டுமே வந்தால் போதும்.

பிறப்பு உறுப்பில் தையல் போட்டிருப்பார்கள்.தையல் வலி, உடல் வலி, புண், மார்பகப் பெருக்கம், இவை தவிர மனரீதியான மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து தாய்க்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்கும்.

இதனால் தாய்க்கு அதிக ஓய்வு தேவைப்படுகிறது. விருந்தினர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசை கட்டி வந்து… குழந்தை அப்பா சாயலா,அம்மா சாயலா?

ஒல்லியா குண்டா? கருப்பா சிவப்பா? பெண் குழந்தையா ஆண் குழந்தையா? என்பது போன்ற குதர்க்கமான கேள்விகள், விசாரணைகள் குழந்தை பெற்ற தாயை மோசமாக பாதிக்கலாம். மொத்தத்தில் அதிக விருந்தினர்கள் வேண்டாம். வீட்டிற்கு வந்த பிறகு பொறுமையாக பார்க்கலாம். பேசலாம்.

-டாக்டர் கண்மணி கணேஷ்,மகப்பேறு மருத்துவர்.