
டாக்டர்.சி.ஏ.ரவி – பேராசிரியர் டாக்டர்.உஷாரவி
நம் பூமியின் அதி அற்புதம் தண்ணீர். மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமும் அதுவே .பூமி மூன்றில் இரண்டு மடங்கு கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அதனால் தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர்.
தண்ணீர் இயற்கை நமக்களித்த உயிர்கொடை. தண்ணீர் குடிநீராக மட்டுமல்ல பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருத்துவமாகவும் திகழ்கிறது.ஆனால் தற்போது தண்ணீரை கையாள்வதில் கவனமின்றி இருக்கிறோம். தண்ணீரின் மகத்துவம் அறியாமல் இருக்கிறோம். இது நல்லதல்ல. தண்ணீரை சரியான முறையில் நாம் பயன்படுத்தினால் அது அமிழ்தமாக மாறி நம்மை மகிழ்வாக வாழ வைக்கும்.

தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும் தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது.
வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு உடனடியாக ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தியை பெற முடியும். .
நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் நம் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.மூளை, நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகள் நீரை மையமாகக்கொண்டே இயங்கிவருகின்றன,மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது.
நீரிழப்பினால் உடலில் உள்ள செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. மனமும் பாதிக்கிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் இரவு தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.
ஒருவர் நாள்தோறும் அவர் இருக்கும் புவியியல் அமைப்பு, வேலை செய்யும் விதம் போன்றவற்றைப்பொருத்து 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். குறிப்பாக ஆண்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியம்.
குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.
நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தம் சுகாதாரமாக இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
கேரள மக்கள் வெறும் தண்ணீரை குடிப்பதில்லை. தண்ணீரில் சீரகம், பட்டை, கிராம்பு, சில மூலிகை வேர்கள்… இப்படி ஏதாவது ஒரு மூலிகை பொருட்களை போட்டு, அதை நன்கு கொதிக்க வைத்து பிறகுதான் குடிக்கிறார்கள்.
நீர்சிகிச்சை
நீர் சிகிச்சை இயற்கை வைத்தியத்தின் ஒரு பகுதியாகும்.இந்த சிகிச்சையில் நீரை பல்வேறு வழிகளில் பல்வேறு விதத்தில் பயன்படுத்தலாம். நோயின் தன்மைக்கேற்றவாறு குளிர்ந்த நீரிலோ (அ)நீரின் வெப்பத்தை கூடுதலாக்கியோ குறைத்தோ சிகிச்சை மேற்கொள்ளலாம்.சூடாக, குளிர்ச்சியாக, நீர்தன்மையாக ஆவியாக, ஐஸ் கட்டிகளாகவும் உட்புறம் வெளிப்புறமும் பயன்படுத்தலாம்.
அனைத்து பொருட்களுடன் கரையும் தன்மை கொண்டதால் நீர், உடலில் எனிமா போல குடல் வழியாக செல்வதால் உடலில் உள்ள யூரிக் அமிலம்,யூரியா உப்புகள்,அதிகப்படியான சர்க்கரை மற்றும் இரத்தத்தில் உள்ள உணவுக்கழிவுகள் உடலை விட்டு வெளியேற உதவுகிறது.
உடல் உறுப்புகளுக்கு அழுத்தம் தரும் வகையில் கட்டுத்துணியால் அழுத்தம் மற்றும் ஒத்தடம் தரப்படுகிறது. இது போல் குளிர்ச்சியை தரக்கூடிய கட்டுத்துணியை வயிற்றுப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து வயிற்றுப்பகுதி உறுப்புகள் நோயால் ஏற்படுத்தப்பட்ட வெப்பத்தை தணிக்கின்றன. சூடான கட்டுத்துணியை கொண்டு நெஞ்சு, அடிவயிறு, சிறுநீர்ப்பை, கல்லீரல், இடுப்பு மற்றும் அடி வயிற்றின் பகுதிகளில் ஒத்தடம், அழுத்தமும் தந்து வலிகளை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
குளியல் முறை
குளிர்ந்த நிலையில் இடுப்பு குளியல், இயற்கையான குளியல், சூடான மாறுபட்ட இடுப்பு குளியல் ஆகியனவும் அளிக்கப்படுகிறது.தண்டு வட குளியல் மற்றும் தண்டு வடத்தில் நீர் பரப்பி அதன் மூலம் தெளித்தல் முறையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்துகிறோம். மேலும் ஆவி பிடித்தல், ஆவி குளியல் முறை கடற்பஞ்சால் ஓத்தி எடுத்தல் முறைகளும் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நீர் பாய்ச்சி மசாஜ் செய்யும் முறையில் குளிர்ந்த வெப்பமான நீரை மாறி மாறி பீய்ச்சி தெளித்து விடுகையில் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.நமது சித்தர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னால் சொன்ன தண்ணீர் மருத்துவத்தை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
31 வருட காலமாக 14 வகையான இயற்கை வழி சிகிச்சை முறையில் தண்ணீர சிகிச்சைக்கும் பெரும் பங்கு உண்டு.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்: 11, பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோயில் எதிரில்,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607 001
செல் 93676 22256

