ழுகை என்பது ஒருவரின் பலவீனத்தின் அடையாளமாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது.மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்பட்டு வருகிறது.ஆனால், அழுகை என்பதும், கண்ணீர் என்பதும் நிச்சயம் உடலில் நடக்கும் தேவையில்லாத ஒரு செயலல்ல என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், 85% பெண்களும், 73% ஆண்களும் அழுத பிறகு நன்றாக உணர்வதாக ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.இப்படி நிம்மதியாக உணர்வதற்கு அழுகை மட்டுமே ஒரு காரணமல்ல. நமது அழுகைக்கு பிறர் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.

அழுகை துக்கத்தின் வடிகாலாக இருக்கிறது. ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தால் அது அவருடைய உடல்நலத்தைப் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.உதாரணமாக, நாம் கண்ணீர் விடுவதைப் பார்த்து மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தி, உதவும்போது நிம்மதியாக உணர்வோம்.ஆனால், நம்மையாரும் கண்டுகொள்ளாதபோது அதை அவமானமாக கருதுவதோடு, நம்மை உதாசீனப்படுத்திவிட்டதுபோல உணர்வோம்.இப்படி மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் பல்வேறு நன்மைகளை உடையது கண்ணீர் என்கின்றனர் அழுகை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள்.

யாராவது அழுதால் அவர்களை அலட்சியம் செய்யாமல் ஆறுதலாக பேசுங்கள்‌.அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.