ண் அறுவைசிகிச்சைக்கான நாட்டின் முதன்மை அறிவியல் மாநாடும், இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின் (IIRSI) முதன்மையான வருடாந்திர நிகழ்வுமான, இரண்டு நாள் ‘IIRSI மாநாடு 2026’-ஐ தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநர் திரு. இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்( 04.07.2026)தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்வு,இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின் (IIRSI) தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜீவன் சிங் திதியால்,IIRSI-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் அமர் அகர்வால், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் டாக்டர் நம்ரதா சர்மா,IIRSI ARC-ன் தலைவர் டாக்டர் கௌரவ் லூத்ரா,IIRSI-ன் முன்னாள் தலைவர் டாக்டர் டி.பி. லஹானே,IIRSI-ன் முன்னாள் தலைவர் டாக்டர் ராகினி பரேக், IIRSI-ன் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ரித்திகா சச்தேவ், IIRSI-ன் முந்தைய முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் ஜே.கே.எஸ். பரிஹார், IIRSI-ன் சர்வதேச அறிவியல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரோஹித் ஓம் பிரகாஷ் மற்றும் டாக்டர் மோகன் ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண் சிகிச்சை நிபுணர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அறிவியல் நிகழ்வுகளுடன், இந்த மாநாடு பிரத்யேக நேரடிப் பயிற்சி அமர்வுகள், ஆய்வறிக்கை சமர்ப்பிப்புகள் மற்றும் IIRSI கண் மருத்துவ நிழற்படப் போட்டி ஆகியவற்றின் மூலம் நடைமுறைக்கு உகந்த கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.கண் மருத்துவச் சிக்கல்களைக் கையாளுதல் மற்றும் மேம்பட்ட அறுவைசிகிச்சை முறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் ஒரு சுவாரசியமான தளமாக ‘ஆப்தால்மிக் பிரீமியர் லீக்’ (மோகன் ராஜன் OPL கோப்பை) விளங்குகிறது.

குழு அடிப்படையிலான வீடியோ விளக்கக்காட்சிகள், சிகிச்சை நேர்வு குறித்த நேரடி விவாதங்கள், அறுவைசிகிச்சை நிபுணர்களின் சுயமதிப்பீடு மற்றும் நிகழ்நேர மதிப்பீட்டு புள்ளிகளுடன் கூடிய நிபுணர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றின் மூலம், இப்போட்டி கண் மருத்துவர்களிடையே மருத்துவ மேன்மையையும் அறுவைசிகிச்சைத் திறனையும் இன்னும் மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பேசும்போது… நமது அன்றாட வாழ்க்கையில் “மனித நேயம் மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

IIRSI அமைப்பின் பொதுச் செயலாளரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான பேராசிரியர் அமர் அகர்வால் உரையாற்றுகையில், “கண் மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நிபுணர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும்,புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவும், கண் மருத்துவ அறிவியலை மேம்படுத்தவும் உதவும் முதன்மைத் தளமாக IIRSI கருத்தரங்க மாநாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மையும் எண்ணிக்கையும், கண் அறுவைசிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு உலகளவில் கிடைத்து வரும் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.

அறிவியல் அமர்வுகள், நேரலையாக நடைபெறும் அறுவைசிகிச்சைகள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம், கண் மருத்துவர்களுக்கு நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவல்களையும், திறன்களையும் இம்மாநாடு வழங்குகிறது.இந்த மேம்பாட்டின் மூலம் சிகிச்சை பெறுவோருக்கு சிறந்த பலன்களை உறுதிசெய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.கல்வி சார்ந்த விஷயங்களைத் தாண்டி,இந்த மாநாடு தொழில்முறை சார்ந்த கூட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், இந்தியாவிலும் மற்றும் உலகளவிலும் கண் சிகிச்சை பராமரிப்பின் எதிர்காலத்தை உருவாக்க கூடிய கூட்டு செயல்பாடுகளுக்கு அடித்தளமிடுகிறது” என்றார்.

-சேகர்.

Health and beauty.