
YOGA FOR STRESS MANAGEMENT
நிறுவனர் மற்றும் இயக்குநர்: DR. A.S. ASHOKKUMAR Ph.D.,(Y.Sc.,)
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், மன இறுக்கம், கோபம் தீர யோக பயிற்சி மிகவும் உதவுகிறது.
இப்போதெல்லாம் காலம், காலமாக சேர்த்து வைத்த பணத்தை கணநேரத்தில் பிடுங்கிவிட்டு, கடனாளியாக நம்மை சாகடிக்கும் புதுப்புது நோய்கள் எக்கச்சக்கமாக வந்துவிட்டன.
கேன்சர், ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர் என உயிரைக் குடிக்கும் நோய்களும், ஆஸ்துமா, இருமல், முதுகுவலி, நீரிழிவு என வாழ்நாளை சித்ரவதை செய்யும் நோய்களும் பெருகி விட்டன.
மன வருத்தமும், சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும்.
மன அழுத்தம் என்பது ஒரு நாளில் ஏற்படுவதில்லை. மனதில் அடக்கி வைக்கப்பட்ட தீவிர உணர்ச்சிகள், வாழ்க்கையைப் பற்றிய நிச்சயமற்ற பாதுகாப்பாற்ற நிலை, ஏமாற்றங்கள், எந்த விஷயத்திலும் அவசர உணர்வுடன் செயல்பட்டாக வேண்டிய சமூக சூழல் போன்ற மனப்பான்மை காரணமாக மனதில் எழக்கூடிய கொந்தளிப்பு, குமுறல் உடல் நலத்தில் அக்கறை காண்பிக்காத போக்கு, கவலை, கோபதாப உணர்வுகள் ஆகியவை மட்டுமின்றி அதிக மகிழ்ச்சி, ஆர்வம் ஆகியவையும் நம் மனத்தின் சமநிலையை பாதிக்கின்றது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
90 சதவீத வியாதிகளுக்கு மூலக்காரணம் மன அழுத்தமே. இதற்கான நவீன மருந்து, மாத்திரை, எந்திரங்களும், டாக்டர்களும் உருவாகி நம்மை காப்பதற்கான முயற்சியில் முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் இவை எதுவுமே இல்லாமல் எல்லோருமே ஆரோக்கியமாக 80 வயது வரை திடகாத்திரமாக ஓடி, உழைத்தார்களே எப்படி? உழைப்பது போலவே தங்கள் உடலையும் அவர்கள் பேணிக் காத்ததுதான்.
ஏமாற்றம், பயம், குழப்பம், நிராகரிப்பு, அதிக சத்தம், கடன், வேலைப்பளு, தனிமை, அதிக நெரிசல், தேர்வு, கோபம், வேலை இழப்பு, உறவில் விரிசல், நட்பு முறிவு, காதல் தோல்வி போன்ற காரணங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எதிலும் ஆர்வமின்மை, அடிக்கடி கோபம். கவலை, சோர்வு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். இவைகளுக்க மூலக்காரணம் மன அழுத்தம். இது கவலைக்குரியது மட்டுமல்ல, மனிதர்களின் சிந்தனை ஆற்றலை பாதித்து பணியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் அனுபவிக்க இயலாமல் செய்கிறது.
மன அழுத்தம் & மன உளைச்சல் என்று கூறக்கூடிய இத்துடன் தொடர்பு உடையது மனச்சோர்வு, பதற்றம், மன இறுக்கம், கோபம். இவற்றிற்கு மூல காரணம் ஒன்றுதான் Irritation மனம் ஏற்றுக் கொள்ளாததால் ஏற்படும் கோபம். அடிப்படை காரணம் நமது மனம் பலவீனமாக இருப்பதே. இதற்கு தீர்வுதான் என்ன என்று மனநல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். முடிவாக யோகப் பயிற்சி ஒன்றே தீர்வு என கண்டனர்.
யோகா என்றால் என்ன?
உடல் & மனம் & ஆன்மா ஒன்று இணைவதுதான் யோகப் பயிற்சி. இதில் ஆசனம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), தியானம் இவைகளை முறையாக கற்று தினம் 20 நிமிடம் பழகி வந்தால் போதும்.
மருந்தில்லா மருத்துவமே இதற்கு தீர்வு.
மன அழுத்தம் குறைய யோகப் பயிற்சி திட்டம்
1.கபாலபாதி கிரியை
2.யோகி முறை மூச்சு (ஆழ்ந்த மூழ்ச்சு முறை)
3.ஆல்ஃபா தியானம் (5 நிமிடம்)
எந்திரத்தனமான, பரபரப்பான வாழ்க்கையில் மன உளைச்சல், கோபம், எதிலும் பரபரப்பு என்ற சூழ்நிலையில் இதயம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதிக துடிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிக ரத்தக் கொதிப்பு, நீண்டநாள் சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை இதய பாதிப்புக்கு முக்கிய காரணம். புகை பிடிப்பது, அதிக மது அருந்துவது, அதிக உடல் எடை, நீண்ட நாள் ரத்தசோகை இதய பாதிப்பை ஏற்படுத்தும்.
மனித உடலானது மிகுந்த ஆரோக்கியத்துடனும், நிறைந்த உறுதியுடனும் இருக்க வேண்டும். அப்போதுதான் புத்தி தெளிவாக செயல்படும். இதற்கு உதவியாக இருக்கக் கூடிய ஒரு எளிமையான அறிவியல் சார்ந்த உபகரணமே ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம்.
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அதைப்போன்று நமது உடல் எனும் எந்திரமானது நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும்வரை எவ்விதமான சிக்கலும் இல்லை. இதில் ஏதேனும் பாதிப்பு வந்தபின் நாம் யோசித்தோம் எனில் அந்த விளைவு மோசமானதாக இருக்கும். இதனால் வருமுன் காப்பதுதான் நல்லது.
நலமான உடல் உள்ளவர்கள், நன்றாக வேலை செய்கிறார்கள், நன்கு சம்பாதிக்கிறார்கள், நல்ல உறவையும், நல்ல நட்பையும் பெறுகிறார்கள். இவை அவர்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பை ஈட்டித் தருகிறது. இந்த வாழ்வுக்கு ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால், இதற்காக உழைப்பவர்கள் சிலரே. அது ஒன்று கடினமானது இல்லை. ஒரு நெறிமுறைப்படுத்தப்பட்ட வாழ்வில் இது மிகவும் சுலபமான ஒன்று. அதற்கு வழிமுறைகள் என்ன?
1.உணவு (சைவ உணவு & பச்சைக் காய்கறிகள், பழங்கள்)
2.யோகா & உடற்பயிற்சி
3.உறக்கம் (அமைதியான ஆழ்ந்த 6 மணி நேர உறக்கம்)
4.உயரிய சிந்தனைகள்
everything is temporary don’t stress என்கிறார் புத்தர்.
இதற்கு எளிய தினசரி மேற்கண்ட யோகப் பயிற்சிகளே போதும். இவை அனைத்தும் எனது பயிற்சி அளித்து வரும் அனுபவமும், பயிற்சியாளர்களின் அனுபவமுமாகும்.
தொடர்புக்கு: செல்:9444026341.

