-சுசான்லி டாக்டர் க.ஆ.இரவி

சிறு மற்றும் குறு தானிய, மூலிகை ஆய்வாளர்

தாய்க்கு மாற்றாகத்தான் அடுத்த உறவுகளை குறிப்பிட முடியும். ஆனால், தாய்க்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது. ஏனென்றால் உலகில் உன்னதமான உறவு ஒன்றே ஒன்றுதான் அது தாய்.

அதேபோல் உலகில் நோய் நீக்குவதில்.. கவனிக்கவும் நோய்களை அழுத்தி வைத்து, அவ்வப்பொழுது தலைதூக்கி அது அல்ல.. முழுமையாக நோய்களை நீக்குவதில் மூலிகைகள் மட்டுமே தாயின் உறவிற்கு இணையாக நிற்கின்றது.

மூலிகை & இந்த மூன்றெழுத்து மந்திரக்கோல் மனித சமுதாயத்தின் 4448 நோய்களையும் அறுத்தெரிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மூலிகை மந்திரக்கோல் நம்மிடமே உள்ள சொந்த பொருள். ஆம். நமது வீட்டின் சமையல் அறையில் ‘அஞ்சரைப் பெட்டி’ என்ற பெயருடனும், நமது தாத்தா பாட்டிகளின் வழிகாட்டுதலில் ‘பாட்டி வைத்தியம்’ என்ற பெயரிலோ, ‘வீட்டு வைத்தியம்’ என்ற பெயரிலோ இதுபோல் இன்னும் பல பெயர்களுடன் உலா வரும் மந்திரக்கோல்தான் நமது பாரம்பரிய மருத்துவமுறை.

பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளை காப்பாற்ற அரசாங்கத்தில் சட்டம் உள்ளதா? இல்லையா? எனத் தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பது போல் தெரிகின்றது. இருப்பினும் நவீன வளர்ச்சியின் வெளிப்பாடு இந்த பாரம்பரிய மருத்துவ முறைகள் தாங்களே வீறு கொண்டு எழுந்தாலும் கூட அடக்கிதான் வைக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிஜம்.

உலகில் விவசாயத்திற்கு சரியான மரியாதை இல்லையென்றால் அது நாம் மரக்கிளையின் மேல் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டுவது போல்தான்.
விவசாயம் என்பது வெறும் வயிற்றுகளை நிரப்பும் உணவு விசயம் மட்டுமல்ல என்பதை பல படித்த அதிமேதாவிகள் உணரவில்லை. எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் அடையாளத்தை எளிதில் அழிக்கின்றன.

ஒருநாட்டில் வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அரசாள அரசன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், விவசாயம் இல்லாமல் இருப்பது சுடுகாட்டில் குளிர் சாதன வசதியுடன் தூங்குவது போல்தான். நாட்டின் வளர்ச்சி என்பது அறிவியல் வளர்வது மட்டுமல்ல.. அறிவு வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி.

விவசாயம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள்தான் மூலிகை சாகுபடி, மரம் வளர்த்தல், பூ வளர்த்தல் இப்படி பல. சென்ற 50&100 ஆண்டுகளுக்கு முன் வரை மூலிகை என்பது அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், மலைப்பகுதியிலும் தானாக வளர்ந்து, மனித சமுதாயத்தை காத்து வளர்த்து விட்டது. ஆனால், இன்றைக்கு மூலிகையை நாம்தான் வளர்க்க வேண்டும். அதற்கும் விவசாயம் தேவை. தேவை குறிப்பிடக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரம் விவசாயிகள் தேவைப்படுவார்கள். ஆனால், அவர்களை விவசாயி என்ற பார்வையிலேயே, அவரையும் வளர விடாமல், அவரின் விவசாய தொழிலையும் வளர்க்க விடாமல் கோமாளியாக்கி பார்க்கின்ற நிலைதான் பல இடங்களில் நடக்கிறது. இது விழிகளில் உதிரத்தை வர வைக்கின்றது.

இன்றைய சூழ்நிலை மூலிகை வியாபாரத்திற்கு ஏற்ற சூழ்நிலை. எனவே மூலிகை தொழிலை துவங்குங்கள். மூலிகை சாகுபடி செய்யுங்கள். இவை எளிதல்ல.. ஆனால், என்னைப் போல் ஒருசிலர் இருக்கின்றோம். எங்களது தடைகளையும், எங்களது வலிகளையும் உங்களுக்கு ஏற்படாமல் சரியாக, கவனமாக, மிக அழகாக நீங்கள் மூலிகை தொழிலை வெற்றி பெற நானும் என்னைப் போல் ஒரு சிலரும் இருக்கின்றோம்.
எனக்கென்ன? என அலட்சியமாக நீங்கள் இதை கடந்து செல்வது உங்களது குழந்தையை நீங்களே தெரிந்து மிதித்து செல்வதற்கு சமம். மூலிகையில் மூலதனம் செய்யுங்கள். ஆனால், மிக வனமாக செயல்படுத்துங்கள். ஒன்று மட்டும் உறுதியாக கூற முடியும்.

நிச்சயமாக தோல்வி வராது. மூலிகை தொழிலில் ஆரம்பத்தில் மிக குறைந்த லாபமாக இருக்கும். போகப் போக அது அதிகரிக்கும். ஆனால், தோல்வி இருக்காது என்பது மட்டும் உறுதி.

மூலிகை தொழில் செய்யவும், மூலிகை விவசாயத்திற்கும் மத்திய மாநில அரசுகள் பல சலுகைகள், மானியங்களை வழங்குகின்றது. அதை நாம்தான் தேடிப் போய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றிற்கான வழிகாட்டுதல், மூலிகை தொழில் பயிற்சி, அரசு அனுமதி, மானிய கடனுதவி, வியாபார வாய்ப்புகள் இப்படி பல்வேறு விசயங்களையும் மிக சிறப்பாக கற்றுத்தர எனது 28 வருட மூலிகை அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும்.
இன்றைக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி நிறுவனங்களுக்கு நான் மூலிகை ஆலோசனை வழங்குவதுடன் எங்களின் மூன்று நிறுவனங்களில் பல பொறுப்புகளை வகிக்கின்றேன். மூலிகை தொழில் மனித ஆரோக்கியத்திற்கான மன திருப்தி தரும் தொழில். எனவே இன்றே நாம் ஏன் ஒரு மூலிகை போர் தொடுக்க கூடாது யோசியுங்கள்.

மாற்றங்கள் நடக்குமா? நடக்காதா என பார்த்துக் கொண்டிருப்பதை விட அந்த மாற்றங்கள் நம் மூலமாக நடக்கட்டுமே. அந்த மாற்றத்தின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் நாமாக இருப்போமே!

தொடர்புக்கு: மெயில்:acudrravi@gmail.com

  வாட்சப்: 9367622256