
டாக்டர் சி.ஏ.ரவி
இது மூலிகைக் காலம்.மூலிகை ஆராய்ச்சி, வளர்ப்பு, பாதுகாப்பு,மக்களிடையே விழிப்புணர்வு என தனது வாழ்நாளையே மூலிகை ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளார் கடலூர் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி.
மூலிகை மருத்துவம் முழுமையான மருத்துவம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.பக்க விளைவுகள் இல்லாதது என்பதுடன் நோய் பாதிப்புகள் மீண்டும் அணுகாது என்பது இதன் தனித்துவம் என்கிறார் டாக்டர் ரவி.
டாக்டர் ரவி தனது 33 வருட பயணத்தை பல இலட்சம் பேருக்கு பயன் உள்ள பாதையாக அமைத்துத் தந்துள்ளார். மூலிகை விழிப்புணர்வு, சிறு-குறு தானிய விழிப்புணர்வு,மூலிகை தொழிற்பயிற்சி என தனது வாழ்நாளில் கால் நூற்றாண்டுக்கும் மேல் இளைய சமுதயாத்திற்காக வழிகாட்டி வருகிறார். இயற்கை விவசாயிகளுக்கு மூலிகை சாகுபடி குறித்து பயிற்சியளிப்பவர்.
பலநூறு மூலிகை தொழில் அதிபர்களை உருவாக்கிய சாதனையாளர்.மத்திய அரசின் MSME, K&VIC ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளையும், மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்.
தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்விருக்கையின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள டாக்டர் ரவி, பள்ளிக் குழந்தைகளுக்கு “மூலிகை ஆரோக்கிய விழிப்புணர்வு ” நிகழ்வுகளை இலவசமாக நடத்தி வருகிறார்.பள்ளிகள், சங்கங்கள்,இயக்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் என யாருக்கு வேண்டுமென்றாலும் ‘மூலிகை ஆரோக்கிய விழிப்புணர்வு ” நிகழ்ச்சியினை இலவசமாக நடத்தி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறு உடல் உபாதைகளுக்கு எளிய முறையில்,மருந்தே இல்லாமல் குணப்படுத்தும் முறையினையும் பொது மக்களுக்கும்,கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாகவே கற்றுத் தருகின்றார்.
சுமார் 1,500க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்திற்கும்,10க்கும் மேற்பட்ட நிறுவனகளுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 20க்கும் மேற்பட்ட மூலிகை புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள டாக்டர் ரவி அவர்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்தி விடை பெற்றோம்.
தொடர்பிற்கு:93676 22256
மின்னஞ்சல்: acudrravi@gmail.com
சந்திப்பு: பவித்ரன்

