டாக்டர் த.ரவிக்குமார்,MD.
கோயம்புத்தூர்,

ண்பர்களுடனோ அல்லது பெற்றோருடனோ உணவகங்களுக்குப் போவது என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அங்கே உணவருந்தும்போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கைகளை நன்கு அலம்பிய பின்னரே சாப்பிட வேண்டும்.சோப்பு இருந்தால் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.கை கழுவிய பிறகு கைப்பை,நாற்காலி போன்றவற்றை தொட வேண்டாம்.அவசியம் இருந்தால் இடது கையை பயன்படுத்தலாம்.அதேபோல உணவுகளின் விலைப்பட்டியலைப் புரட்டும்போதும், சாப்பிடத் தயாராகக் கழுவி வந்திருக்கும் வலது கையைப் பயன்படுத்த வேண்டாம்.செல்ஃபோன், சாவி போன்ற எந்த ஒரு பொருளையும் உணவு மேசை மீது வைக்காதீர்கள்.

வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டால் உடனே சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.காசு கொடுத்து ஆர்டர் செய்த பொருளை வீணாக்கலாமா?” என்று அனாவசியமாக வயிற்றில் திணிக்காதீர்கள். மொத்தமாக முதலிலேயே ஆர்டர் செய்வதைவிட ஒவ்வொன்றாகச் சாப்பிட்டு முடித்த பின்னர் அடுத்த பண்டத்தை வரவழைப்பதுதான் சிறந்தது.அதிகப்படி உணவு குப்பைக்குப் போனாலும் பரவாயில்லை, தொப்பைக்குப் போய்விடக்கூடாது!

மேசை மீது அல்லது தரையில் விழுந்த உணவுப்பொருட்கள் மற்றும் ஸ்பூன் போன்றவற்றை எடுக்க வேண்டாம்.சாப்பிட்ட பிறகு தட்டில் கை அலம்புவது தவறு. அதிகமான எண்ணெய், காரம் மற்றும் நிறம் கொண்ட பதார்த்தங்களை ஒதுக்குவது உடலுக்கு நல்லது.ஸ்பூனைப் பயன்படுத்திச் சாப்பிட்டால்கூட கை அலம்பி, வாயை நன்கு கொப்பளிக்கவும். டிஸ்யூ பேப்பரில் கை துடைத்தால், அதைக் குப்பை போடும் இடத்தில் போடுங்கள்.தரையில் போடாதீர்கள்.

கல்லாப்பெட்டிக்கு அருகே வைத்திருக்கும் கிண்ணத்தில் உள்ள சோம்பு, கல்கண்டு போன்றவற்றை அள்ளி வாயில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது உத்தமம். காரணம் பலரும் அந்தக் கிண்ணத்தில் கைகளை விட்டிருப்பார்கள். கிருமித்தொற்று உங்களுக்கு ஏற்படலாம்!

சுகாதாரமான உணவகத் தேர்வு மிகவும் முக்கியம்.பிரதான சாலைகளில் உள்ள… குறிப்பாக புழுதி,அழுக்கு பரவக்கூடிய இடங்களில் உள்ள உணவகங்களை தவிர்ப்பது நல்லது.