டாக்டர் சு. முத்து செல்லக்குமார்
மூளை இருக்கா? என்று யாராவது கேட்டால், ஏன் வாங்கித் தரப்போறியா? என்று கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால், இன்று பல்வேறு விலங்குகளின் மூளை நமக்கு உணவாகக் கிடைக்கிறது. ஆடு,மாடு,மான், முயல் என பல்வேறு விலங்குகளின் மூளைகளையும் மனிதன் உண்ணப் பழகி விட்டான். இறைச்சிக் கடைகளில், இங்கு மூளை கிடைக்கும் என்றே எழுதிப் போடுகிறார்கள்.
சில ஹோட்டல்களில், தலைக் கறியை விரும்பிச் சாப்பிடு கிறவர்கள் இருக்கிறார்கள். மூளைக் கறி பிரியர்களும் ஏராள மாக உள்ளார்கள். மூளையைச் சாப்பிடுவதால், மூளை வளர்ச்சி அடையும், திறமை பெருகும் என்று நினைத்தால் அது தவறு.
மூளையின் பெரும்பகுதி கொழுப்பால் ஆனது. எனவே, அதிக அளவு மூளை உணவுகளை உட்கொண்டால், அதில் உள்ள பூரிதமான கொழுப்பு உடலில் அதிகரித்து கொழுப்புப் படிவங்கள் உண்டாகி, அவை உடலில் சேமித்துவைக்கப் படும். இதனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக் கும். உடல் பருமன் உண்டாகும். எனவே, இதய நோய் களைத் தடுக்க விரும்புபவர்கள், விலங்குகளின் மூளை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

