ழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய ஏலுமிச்சை பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் உடம்புக்குத் தேவையான சக்தியைப் பெறலாம். எலுமிச்சைப் பழ ரசத்தை அருந்துவதால் உடல் சூட்டைத் தணிக்க உதவுவதோடு பித்த கிறுகிறுப்பைப் போக்கப் பயன்படுகிறது.

வெறும் எலுமிச்சை ஜூஸ் அருந்துவதைவிட அதனுடன் இஞ்சிச்சாறு, நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டால் புது உற்சாகம் கிடைப்பதோடு சோர்வு நீங்கி தலை கிறுகிறுப்பு, பித்த மயக்கம் போன்றவற்றை விரட்டும். வாதநோயால் அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சைப் பழச்சாறை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நோய் குணமாக வாய்ப்பு உள்ளது. உடம்பில் அரிப்பு,தடிப்பு, அலர்ஜி வந்தால் 30 மில்லி எலுமிச்சைச் சாறுடன் அதே அளவு தேன் கலந்து 150 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு 2, 3 தடவை குடித்து வந்தால் பிரச்னை சரியாகும்.

பசி, மந்தம், ருசியின்மை, வாய்வுப் பிரச்னை, உடல் மதமதப்பு,  மந்த புத்தி உள்ளவர்கள் நீர் மோரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை போன்றவற்றைக் கலந்து உப்பு சேர்த்து தினமும் 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் பிரச்னை சரியாகும். கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க எலுமிச்சைச் சாறுடன் தக்காளி, தேன், தண்ணீர் கலந்து தினமும் 2, 3 முறை குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.