அக்குபஞ்சர் சிகிச்சை என்பது மருந்து மாத்திரை இல்லாதது.வலி போக்கும்;நோய்கள் வராமல் தடுக்கும்;வந்தாலும் விரட்டி அடிக்கும்.இப்படி பல்வேறு சிறப்புகள்  வாய்ந்த சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அரும்பாடுபடும், கடலூர் டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் பேராசிரியர் டாக்டர் உஷா ரவி மருத்துவ தம்பதியர்.
 
 
அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்பிப்பது…தொடர் பயிற்சி அளிப்து…சிகிச்சைஅளிப்பவர்களை பாதுகாப்பது, இது தான் இவர்களது முக்கிய கடமை.
 
டாக்டர் சி.ஏ.ரவி,தொலைநோக்கோடு அக்குபஞ்சர் மருத்துவத்தை பாதுகாத்து வளர்க்க  அக்குபஞ்சர் கவுன்சிலை(council of Indian Acupuncturists and Research center)
தொடங்கி 25 ஆண்டுகளாகிறது.
கடலூர் திருவந்திபுரத்தில் வெள்ளி விழா கொண்டாட்டம்(18,19.06.22) நடைபெற்றது.
 
அக்குபஞ்சர் மருத்துவத்தை தேசிய அளவில் கொண்டு சேர்ப்பதற்காகவும்,சிகிச்சை அளிப்பவர்களை பாதுகாக்கவும் மத்திய அரசின் கெசட்டில் கவுன்சில் பற்றிய விவரங்களை வெளியிட்டு சாதனை செய்ததோடுமட்டுமல்லாமல்  அக்குபஞ்சர் சிகிச்சைக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கவும் பாடுபட்டிருக்கிறார்.
 
வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்குபஞ்சர் நிபுணர்கள், தாங்கள் சந்தித்த மருத்துவ சவால்களை,சிகிச்சையில் கிடைத்த வெற்றிகளை பகிர்ந்து கொண்டனர். 
மூளை மூடுபனி (BRAIN FROG) என்ற தலைப்பில்  பேராசிரியர் டாக்டர் உஷா ரவி சிறப்புரை நிகழ்த்தினார்.
 
டாக்டர் தம்பதியரின் விடா முயற்சியை நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.
 
-பவித்ரன்