ம்மைச் சுற்றி எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்கலாம். ஒரே நேரத்தில் எல்லா பிரச்சினைகளையும் சிந்தித்து, கையாள ஆரம்பித்தால், நாம் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். 

ஒரு பிரச்சினையைக் கூட சரியாக தீர்க்க முடியாமல் போகும். சரியான அணுகுமுறை என்னவெனில், உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் பட்டியலிட்டு, ஒரு சமயத்தில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு, அதில் கவனம் செலுத்த வேண்டும் .மற்ற எல்லா பிரச்சினைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

ஒரு சமயத்தில் ஒரு பிரச்சினையை கையாள்வதன் மூலம்,  எல்லா பிரச்சினைகளையும் நினைத்து திணற வேண்டியதில்லை.ஒன்றே ஒன்று கவனமாக இருந்தால்…பிரச்சினையைத் தீர்க்கும் செயலில் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.

எல்லா பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் கண்டு, தீர்க்க முயற்சிக்கும்போதுதான் அவை உங்களை திணற அடிக்கும்.எதையும் தீர்க்க முடியாமல் விரக்தியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும்.

ஒன்றே செய்.நன்றே செய்.அதையும் இன்றே செய்!

– டாக்டர் ஆர்.பரமேஸ்வரன், உளவியல் ஆலோசகர், மும்பை.