காய்கறிகளில் கொஞ்சம் விலை மலிவாகக் கிடைக்கக்கூடியது முட்டைகோஸ். ஆனால், அதில் உள்ள பலன்களோ அதிகம்.முட்டைகோஸை சாறாக்கி தினமும் குடித்து வந்தால், அல்சர் சரியாகும். சமையல் செய்து சாப்பிடுவதைவிட அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அதன் பலன் அதிகம்.அரை டம்ளர் முட்டைகோஸ் சாறுடன் அதே அளவு எலுமிச்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் முதுமையைக்கூட தள்ளிப்போடலாமாம். இதே சாறுகளின் கலவையுடன் தேன் கலந்து குடித்தால் கொஞ்சம் வீரியம் அதிகம்தான்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு முட்டைகோஸ் சாறு, கேரட் சாறு, வெள்ளரிச் சாறு மூன்றையும் கலந்து குடிக்கக் கொடுத்து வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் முட்டைகோஸை வெறுமனே சமைத்தோ, பசலைக்கீரையுடன் கலந்தோ சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், தொப்பை குறையும்.

முட்டைகோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதைத்தான் உணவாகப் பயன்படுத்துகிறோம். இதில் உயிர்ச்சத்துகள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவான இது, உடல் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.