
திடீரென்று கழுத்தைத் திருப்புதல், அதிர்வு தரும் அசைவுகள், அதிக சுமையைத் தூக்குதல், வேகமாகத் தலையை அசைத்தல் மற்றும் தலையைத் திருப்புதல் போன்ற பல காரணங்களால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும்.
அப்போது சுளுக்கு எடுப்பது பலருக்கும் பழக்கம். இது தவறு. இப்படிச் சுளுக்கு எடுப்பதில் ஆபத்து உள்ளது. காரணம், கழுத்தெலும்பில் உள்ள ஜவ்வு விலகியிருந்து.
.. அதன் காரணமாக கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருந்தால், சுளுக்கு எடுப்பதன் மூலம் நோய் கடுமையாகிவிடும். பதிலாக, கழுத்துக்கு முழுமையாக ஓய்வு தந்தாலே சுளுக்கு குணமாகிவிடும். அத்துடன் வலிநிவாரணி களிம்புகளைத் லேசாக தடவி மசாஜ் செய்யலாம். வலி நிவாரணி மாத்திரை மற்றும் ஊசிகளை பயன்படுத்தலாம். பிசியோதெரபியும் பயன் தரும்.
-டாக்டர் கு. கணேசன்

