
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் பலருக்கும் வருகிற தலைவலி இது.இதுவும் பெண்களிடமே அதிகம்.எந்த வயதிலும் இது வரக்கூடும்,என்றாலும் நடுத்தர வயதினரிடம் இது அதிகம் காணப்படுகிறது.இந்த வலியால் நோயாளியின் வாழ்க்கைத் தரமும் வேலைத்திறனும் பாதிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென தலை முழுவதும் வலிக்கும்.
ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இருக்கும்.தலையைச் சுற்றி கயிறு கட்டி அழுத்துவது போலிருக்கும்.பக்க மண்டையிலும், பின்மண்டையிலும் வலி இருக்கும்.இது பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.
காலையில் இந்த வலி குறைவாகவும்,நேரம் ஆக ஆக வலி கடுமையாகலாம்.முக்கியமாக மாலை நேரத்தில் அதிகம் படுத்தும்.ஏதாவது ஒரு வேலையில் கவனம் திரும்பினால் வலி குறைவது போலிருக்கும்.
அதிக வேலைப்பளு, மனக்கவலை,மன அழுத்தம் பரபரப்பான வாழ்க்கை முறைகள்,எடுத்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற முழுவேகத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் திடீர் இழப்பு, வேலையின்மை,நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகள் ஆகியவற்றால் தலை மற்றும் கழுத்துத் தசைகள் இறுக்கப்படுவதால் இந்தத் தலைவலி வருகிறது.சில வலிநிவாரணிகளும் அமிடிரிப்டிலின் மாத்திரையும் இதற்கு நிவாரணம் தருகின்றன .
மன அழுத்தத்தைக் குறைத்து,மனதுக்கு நல்ல ஓய்வு கொடுத்து, தேவையான அளவுக்கு நிம்மதியாக உறங்கினால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும். பிசியோதெரபி, ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கு உதவும்.

