நவீன யுகத்தில்‌ அலுவலக வாழ்க்கை முறையால்‌ உடலுழைப்பு வெகுவாகக்‌ குறைந்துவிட்டது. மேலும்‌ தொலைக்காட்‌சி, வானொலி, தொலைபேசி, கைபேசி ஆகியவற்றாலும்‌ தானியங்கி வாகனங்களாலும்‌ பெரும்பாலும்‌ நடந்து செல்வதைத்‌ தவிர்த்து நாம்‌ வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறோம்‌. ௭ரியும்‌ நெருப்பில் மேலும்‌ எண்ணெய்‌ ஊற்றுவதுபோல, வீட்டில்‌ இருக்கும்போது தேவைக்கு அதிகமாக நொறுக்குத்‌ தீனி உண்பதால்‌, உடல்‌ பருமன்‌, சர்க்கரை நோய்‌, மாரடைப்பு, உடல்வலி மற்றும்‌ மூட்டு நோய்‌ போன்ற பல அவதிகளுக்கு ஆளாகிறோம்.

தினமும்‌ தவறாமல்‌ உடற்பயிற்சியைச்‌ செய்வதால்‌ உடல்நலம்‌ பலவிதத்தில்‌ பாதுகாக்கப்படும்‌.

தினமும்‌ சுமார்‌ ஐந்து கிலோமீட்டர்‌ தூரம்‌ நடத்தல்‌ அனைவருக்கும்‌ நல்லது. ரத்த அழுத்தம்‌, மாரடைப்பு நோய்‌, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அவசியம்‌ உடற்பயிற்சி தேவைப்படும்‌. அவர்கள்‌ மருத்துவ ஆலோசனையுடன்தான்‌ உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்‌.

முப்பது வயதுக்குள்‌ எந்த உடற்பயிற்சி வேண்டுமானாலும்‌ செய்யலாம்‌. ஓரே நாளில்‌ உடற்பயிற்சி அளவின்‌. உச்சத்தை அடையாமல்‌, சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும்‌. மார்பு படபடக்கும்‌ உடற்பயிற்சிகளைப்‌ பொதுவாகத்‌ தவிர்க்க வேண்டும்‌.

நடத்தல்‌, ஓடுதல்‌, நீந்துதல்‌, சைக்கிள்‌ ஒட்டுதல்‌ மற்றும்‌ கால்பந்து போன்ற விளையாட்டுகள்‌ உடலுக்கு நலம்‌ பயப்பதாகும்‌. முப்பது வயதுக்கு மேல்‌ பழக்கமில்லாததும்‌ கடுமையானதுமான விளையாட்டுகளில்‌ பங்கேற்பதைத்‌ தவிர்க்க வேண்டும்‌.

கடுமையான உடலுழைப்பு செய்பவர்களுக்குத்‌ தனியாக உடற்பயிற்சி எதுவும்‌ தேவையில்லை.