பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் கான்கிலேவ் (Economic Conclave) என்பது கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஒன்றிணைந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்கும் ஒரு உயர்மட்ட மாநாடாகும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், யுனைடெட் எகனாமிக் ஃபோரம் (UEF) சார்பில் ‘தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு 2026’ டிசம்பர் 8-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

‘லட்சியங்களை செயல்படுத்துவோம்’ (Putting Ambition to Work) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில்துறை, தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து யுனைடெட் எகனாமிக் ஃபோரம் தலைவர் அகமது ஏ.ஆர்.புகாரி கூறுகையில்,

“தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி, தொழில்முனைவோர் திறன் மற்றும் மனிதவளம் அதிகமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், தரமான கல்வி மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். இதற்காக தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

மாநாட்டுத் தலைவரும், கோத்தாரி குழுமத்தைச் சேர்ந்தவருமான ஜின்னா ரஃபிக் கூறுகையில்,

“தமிழகத்தின் வலுவான தொழில்துறை கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க முடியும். தொழில்துறையின் உண்மையான பிரச்னைகளைக் கண்டறிந்து நடைமுறைத் தீர்வுகள்,முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம்”என்றார்.

இந்த மாநாட்டின் நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் குழுவில் முகமது அலி,நவீத் கான், டபிள்யூ.எஸ். ஹபீப், விஜய் குமார்,டேவ் ஜெயசெல்வன், திலீப் கிருஷ்ணா, தாமோதரன் சுப்பிரமணியன், வினோத் குமார் சீனிவாசன்,டாக்டர் சிவானந்தா கோட்டேஷ்வர், சாண்ட்ரா ஆண்ட்ரூஸ்,டாக்டர் சுரேஷ் வேணுகோபால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ச்சித் துறைப் பொறுப்பாளர்களாக பார்வேஸ் ஆலம், ஃபஹீம் அகமது, முகமது யூசுப், ஃபசீலத் வாஜித், உமர் முக்தார், பாத்திமா பாத்தூல், யாசர் இப்ராகிம், சஜித் சாதக் மற்றும் டாக்டர் அஜ்மல் தஸ்தகீர் ஆகியோர் செயல்படுகின்றனர்.

மாநாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜவுளி,மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகம் மற்றும் சர்வதேச வர்த்தகம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை என 10 முக்கியத் துறைகளில் 50 கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4 டிரில்லியன் டாலராகவும் உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஐஐடி மெட்ராஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பங்காளராகவும், SAS Partners அறிவுசார் பங்காளராகவும், CIO Association தொழில்நுட்பப் பங்காளராகவும் இணைந்துள்ளன. ஏர்டெல் பிசினஸ் முதன்மைப் பங்காளராகப் பங்கேற்கிறது.

மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளைச் செயல்படுத்தும் வகையில் 90 நாட்கள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும், மாநாட்டின் பரிந்துரைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மைகள் குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தின் பல்துறை தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் – யு.இ.எப்.தமிழ்நாடு மாநாடு 2026: ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேச்சு:-

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பல டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில், யுனைடெட் எகனாமிக் ஃபோரம் (UEF) சார்பில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநாடு 2026-ல் ஐஐடி மெட்ராஸ் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மட்டுமின்றி, அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலி, சரக்குப் போக்குவரத்து மற்றும் மதிப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்தப்படும்.

மேலும், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத் தீர்வுகள் அனைவருக்கும் ஏற்ற விலையில் கிடைப்பதுடன், அதிக அளவில் விரிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பலத்தையும் பயன்படுத்தி பல்வேறு துறைகளில் புதிய வளர்ச்சியை உருவாக்க முடியும்.

இந்த முக்கியமான மாநாட்டை நடத்துவதில் ஐஐடி மெட்ராஸ், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் அதன் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் யுனைடெட் எகனாமிக் ஃபோரத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றன.

சமூக நலனுக்குப் பயன்படும் வகையில் நவீனமான, சமத்துவமான, அனைவரும் அணுகக்கூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள் தமிழகத்தில் அதிக அளவில் உருவாக வேண்டும். இந்த மாநாடு சிறப்பான வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்தார்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பல டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில், யுனைடெட் எகனாமிக் ஃபோரம் (UEF) சார்பில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநாடு 2026-ல் ஐஐடி மெட்ராஸ் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், மின்னணுவியல், செமிகண்டக்டர், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஜவுளி, மருந்து, வேளாண்மை, பசுமை எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட பொறியியல் உள்ளிட்ட முக்கிய துறைகளின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் யுனைடெட் எகனாமிக் ஃபோரம் தலைவர் அகமது புகாரி, தலைவர், யுனைடெட் எகனாமிக் ஃபோரம் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு 2026 ஜின்னா ரஃபிக் அகமது, பேராசிரியர் காமகோடி – இயக்குநர், ஐஐடி மெட்ராஸ், பேராசிரியர் ஆர். சாரதி – திட்டமிடல் துறை புல முதல்வர், ஐஐடி மெட்ராஸ், அலெக்ஸ் டி. கோஷி – பங்குதாரர் மற்றும் இயக்குநர், எஸ்.ஏ.எஸ். பார்ட்னர்ஸ் நிறுவனம் பங்கேற்றனர்.

-குணா.