
டாக்டர்.சி.ஏ.ரவி., பேராசிரியர். டாக்டர்.உஷாரவி,
மூலிகை-அக்குபஞ்சர் தம்பதிகள்.
நோய்களின் ஆழம் எப்படி இருப்பினும் முக்கியமாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது…
நோபல் பரிசு பெற்ற அறிஞர் டாக்டர் அலெக்ஸிஸ்காரல் கூறுவதை கவனிப்போம்!
“நோய்வயப்பட்ட மனித உடலில்,நோய் குணமாக இயற்கையான ஒரு முறை செயல்படுகின்றது. அதில் நம்பிக்கை சேரும் போது குணமாகும் முறை வேகமடைகின்றது”.
எப்படிப் பார்த்தாலும் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாமல் எதுவும் முழுமை அடையாது’ என்பதனை புரிந்து கொண்டால் நோய்கள் நம்மை முழுமையாக தாக்க முடியாது! இன்றைய காலகட்டம் “நவீனம்” என்றும் “அதிநவீனம்” என்றும் ஓடிக்கொண்டிருக்கின்றது. நோய்கள் அதிநவீனத்தைவிட வெகு வேகமாக வளர்ந்தும், பறந்தும் கொண்டுள்ளது என்றால் மிகையல்ல!.
கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆரோக்கிய சுழ்நிலை மாறித்தான்
உள்ளது. ஆனால் திடமாக ஆரோக்கிய சூழல் உருவாகவில்லை என்பதும் மறுக்க முடியாது!
எங்களது தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை, மஞ்சக்குப்பம், கடலூரில் செயல்படுகின்றது. 30ஆண்டுகளாக நாங்கள் 14வகையான இயற்கை முறை மருத்துவங்களின் துணையோடு எந்த ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மிக நல்ல நிவாரணத்தை வழங்குகின்றோம்! எங்களின் நம்பிக்கை என்னவென்றால், நோயில்லா மனித குலம் வேண்டும்.அது எங்களால் முடியும் என்று நம்புகின்றோம்!
உதாரணத்திற்கு வலி பிரச்சனையால் துவளும் ஒருவரால் தனது வேலைகளை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாது. சதா சர்வகாலம் அந்த “வலி”யைப் பற்றிய சிந்தனையாகவே மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். எப்படியாவது வலி நின்றால் சரி என்று ஏதாவது ஒரு வலி நிவாரண மாத்திரையை சாப்பிட்டு அதன்பின் அந்த மாத்திரையைவிட ஸ்ட்ராங்கான மாத்திரை என்று மாறிமாறி சிறிது காலத்திற்கு வலியினை மறக்கடிக்க ஆழ்ந்து விடுகின்றார்கள். ஆனால், நிரந்தர தீர்வை தேடுவதில்லை! அதன் விளைவு வேறு வேறு பிரச்சனைகளுக்கும் ஆட்பட நேரும்.
எனவேதான், இயற்கை முறை மருத்துவங்கள் சிறந்த அனுபவமிக்க மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மிக நல்ல தீர்வுகள் கிடைக்கும்! இது வலி போன்ற பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல! உடலில் ஏற்படுகின்ற 4448 நோய்களுக்கும் பொருந்தும்!
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்கமருப்பு யாழொடு பல்லியம்………
தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே………
– என்ற புறநானூற்று பாடல் நமக்கு பல விசயங்களை தெரிவிக்கும்!
இரவம், வேம்பு, வாயிற்படியில் சொருகி வைத்து, அகிற்புகையூட்டி, வெண்கடுகு என இடுதல் ஆகியன தீயசக்திகளை விரட்டும் என வருகின்றது.
அதை இன்றைய காலகட்டத்திற்கு நாம் மிகவும் சரியாக யோசித்தால்… தீய எண்ணத்துடன் வருபவரின் தாக்குதலை தடுப்பதுடன் கண்ணுக்கு தென்படாத, மனிதர்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக செயல்படும் கிருமிகளை கொல்லும் சக்தி இம்மூலிகைக்கு உண்டு.
தெளிவுபட கூறுகின்றோம்… தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள்! நோய்கள் வரும் முன் நம்மை தற்காத்துக் கொள்ளுதல் நல்லது! ஆனால் இன்றைய உலகில் நோய்கள் வந்த பின் தான் மருத்துவத்தை தேடி ஓட வேண்டிய சூழ்நிலை! ஒவ்வொரு நாளும் புதுப் புது நோய்கள் வந்த வண்ணமாக உள்ளன. இவைகளை வேரோடு சாய்க்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கை சார்ந்த முறைகளும், வாழ்நாளை அதிகரித்து நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கும் பாரம்பரிய உணவுகள்,சிறுதானிய உணவுகள், நம் நாட்டு காய்கறி, கனி வகைகளே சிறந்தது!
நோய் எதுவென்றாலும் என்ன செய்வது என குழப்பமில்லாமல் தீர்வைத் தேடுங்கள். நாங்கள் வழி நடத்துகின்றோம்.
மேலும் விவரங்களுக்கு:
“தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்”
எண்:11. பாரதிதாசன் தெரு, பிள்ளையார்
கோயில் எதிரில்.
மஞ்சக்குப்பம்.
கடலூர்-607 001.
செல்: 93676 22256.

