நுணா… கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு மரம். சீமைக் கருவேல மரத்துக்கு அடுத்தபடியாக தமிழக கிராமங்களில் பெருவாரியாகக் காணப்படும் நுணா எனப்படும் மஞ்சணத்தியின்
காய்கள், பச்சை நிறத்தில் நான்கு முனைகளுடன் வளரும்.பழுத்த நிலையில் கருப்பு நிறத்துடன் காணப்படும் இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவை. புளிப்பும் லேசான இனிப்புச்சுவையுடன் இருக்கும்.

நுணாக்காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் எல்லாவிதமான நோய்களும் நீங்கி உடல் பலம்பெறும்.நுணா இலைச்சாறு, நாள்பட்ட புண்களையும் குணப்படுத்தக் கூடியது.

உடல் வலிக்காக நொச்சி, வாதநாராயணன் இலைகளுடன் நுணா இலையையும் சேர்த்து கொதிக்கவைத்து உடம்பில் ஊற்றி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

சமீபகாலமாக நோனி என்று சொல்லி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களே… அதன் குடும்பம் தான் இந்த நுணா என்று சொல்லப்படும் மஞ்சணத்தி.

இது பசியைத் தூண்டுவதோடு உடல் வெப்பத்தைத் தணித்து மாந்தத்தைப் போக்கி கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளையெல்லாம் சரிசெய்யும்.