பெண்களுக்கு திருமண வயது 21..நல்லதா?

டாக்டர் அருண்.B.S.M.S, சித்த மருத்துவர்
இந்து திருமண சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 ஆக இருந்தது.
தற்போது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பல நன்மைகள் உண்டு.

1. குடும்பங்களின் பொருளாதார சூழல், வசதி இல்லாத மற்றும் அறிவு முதிர்ச்சி இல்லாத பல குடும்பங்களில் பெண்களை விரைவில் திருமணம் செய்து அனுப்புவதை வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். இதனால் 18 வயது நிரம்பியதும் எவ்வளவு அறிவான பெண்ணானாலும் அவளின் வளர்ச்சி திருமணத்தால் சிதைக்கப்படுகிறது. திருமணம் 3வருடம் தள்ளி போவதால் நிச்சயமாக நல்ல மாற்றம் வரலாம்.படிக்கவும் வேலை வாய்ப்பை பெறவும் சுயமாக சிந்தித்து செயல்பட வாய்ப்பு ஏற்படும்.
2. முன்பு குழந்தை திருமணம் இருந்த தால் தான் 10,15 குழந்தைகளெல்லாம் பெற்றெடுத்துள்ளனர். திருமண வயது 18 ஆக மாற்றிய பிறகே இந்த நிலை மாறியது.குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்தன.
21 வயதாக உயர்த்தும்போது பெண்கள் நிறைய படிக்கவும் வருவாய் ஈட்டவும்..ஆளுமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
3. சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது.
பிரசவகால மரணங்கள் 70% குறைந்திருக்கிறது.வாழ்க்கைத் தரம் உயர்கிறது.இதற்கெல்லாம் முக்கிய காரணம் திருமண வயதை நிர்ணயம் செய்தது தான்.21 ஆக உயரும்போது பிரசவகால மரணங்கள் குறையும்.
4. 21 வயதாக நிர்ணயம் செய்வதால் உடல் மன நல மேம்மாடு கிடைக்கும்.
5. அறிவு முதிர்ச்சி ஏற்படும்.குடும்பப் பிரச்சனைகள் குறைந்து விவாகரத்தும் குறையும்.
6. குழந்தைப் பேற்றின்போது ஏற்படும் அதீத மனச்சோர்வு குறையலாம்.
திருமண வயதை உயர்த்துவதில் சில பாதகங்கள் உண்டு.பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள் நினைத்த நேரத்தில் திருமண ஏற்பாடு செய்ய முடியாமல் காத்திருக்க நேரிடும்.கலாச்சார காவலர்கள் என்று சொல்லிக்கோள்பவர்கள் வயது உயர்வை பயன்படுத்தி காதல் திரூமணங்களை தடுக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நம்புகிறார்கள்.

