


சென்னை பாடியில் பாரம்பரியமிக்க டி.வி.எஸ்.சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தில்
டாக்டர் .பி.கமலேஷ் குமார் தலைமையில் மனநல விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர்.ஜி.ராஜமோகன்,சைக்கோதெரபிஸ்ட்டுகள் பரணிராஜ்,ஆஷிகா,சந்திரலேகா மற்றும் பல மனநல ஆலோசகர்கள் ஊழியர்களோடு கலந்துரையாடினார்கள்.உடல் நலத்தை பாதுகாப்பது போலவே மன நலத்தையும் பாதுகாக்கவேண்டும் ..அதற்கு எப்படிப்பட்ட வாழ்க்கை முறை தேவை என்று வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினார்கள்.மன நலம் பற்றிய கண்காட்சியும் நடைபெற்றது.
ஊழியர்களின் மேம்பாட்டுக்கு..உடல் மன நல ஆரோக்கியத்திற்கு இது போன்ற முகாம்கள் பேருதவியாக இருக்கும்.
நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-குணா

