
உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத ஒரு குணம் கல்லீரலுக்கு உண்டு.அதாவது, தன்னுடைய செல்கள் பாதிக்கப்பட்டாலும், அவற்றைச் சரி செய்து, புதிய செல்களை உருவாக்கி, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறன் கல்லீரலுக்கு உண்டு.ஆனால், அடிக்கடி இப்படி ஏற்படுவதும் ஆபத்து. கையில் அடிபடுகிறது. சில நாட்களில் காயம் ஆறிவிடுகிறது.அந்த இடத்தில் தழும்பு ஏற்படுகிறது.சிறிய தழும்பாக இருந்தால் சில வருடங்களில் மறைந்துவிடும்.பெரிய தழும்பாக இருந்தால்,அது சுருங்கி அந்த இடம் பார்ப்பதற்கு சகிக்காது. மிகப் பெரிய தழும்பாக இருந்தால், அந்த இடம் இழுத்துக்கொண்டுவிடும்.
இது போல் மது குடிப்பவர்களுக்கு அடிக்கடி கல்லீரல் பாதிக்கப்படும்.இதனால், கல்லீரல் செல்களில் மீண்டும் மீண்டும் தழும்புகள் ஏற்பட்டு, இழுத்துக்கொள்ளும். கல்லீரல் சுருங்கிவிடும். இதைத்தான் ‘லிவர் சிரோசிஸ்’ என்று சொல்லுகிறார்கள். இது உயிருக்கு ஆபத்து தருகின்ற நோய். இது வந்துள்ளவர்களுக்கு வயிற்றில் நீர் கோத்து பானை மாதிரி ஊதிவிடும்.இதைத் தொடக்கநிலையிலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் ஆபத்து குறையும். தாமதமானால், மரணம்தான்.

