ருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவில் பரவக்கூடிய தொற்றுநோய் டி.பி.உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இது எளிதில் தொற்றிக்கொள்ளும். மைக்கோபாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் (Mycobacterium Tuberculosis – MTB) என்ற கிருமி தொற்றினால் இது வருகிறது.ஒருவரது உடம்பில் தொண்டை, நுரையீரல் பகுதியை இந்த நோய் தாக்கினால் மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடும்.மூளை, கல்லீரல், குடல், கிட்னி, மூட்டுப் பகுதி, கண் போன்ற உடம்பின் மற்ற எந்த உறுப்புகளைத் தாக்கினாலும் இது அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்பே இல்லை.

பொதுவாக எல்லோருடைய உடம்புக்குள்ளும் MTB நுண்கிருமி ஒன்று, இரண்டு இருக்கும்.சளி, எச்சில் மூலமாகவும், சுவாசிக்கிற பாக்டீரியாவின் அளவு அதிகமாகும்போதும். உடலுக்குள் இருக்கும் இந்த கிருமியின் அளவும் அதிகரிக்கும்.சரிவர கவனிக்காவிட்டால், டி.பி. நோய் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

இதன் அறிகுறிகள்…

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து லேசான காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும்.உடல் எடை குறைந்துவிடும்.பசியே இருக்காது.மூன்று வாரத்துக்கு மேல் இருமல், லேசான காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.டைஃபாய்டு, மலேரியா போன்ற நோய்களுக்கு ஒருவகையான மருந்து கொடுத்து குணப்படுத்திவிடலாம். ஆனால், டி.பி-யைப் பொறுத்தவரை நான்கு மருந்துகள் ஒன்றாகக் கொடுத்தால்தான் கிருமிகள் அழியும். நோயாளிகள் முழுமையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், பாதியில் நிறுத்தினால், அந்தக் கிருமிகள் முற்றிலும் அழியாமல் உடம்பில் இருந்துகொண்டே இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரை மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளுதல், அதிக அளவு புரதச்சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுதல், காற்று வசதியுள்ள இடத்தில் வசித்தல் போன்றவற்றாலும், தொடர் சிகிச்சையாலும் டி.பி.யை முற்றிலும் குணப்படுத்த குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும். சிலருக்கு 2 வருடங்கள்கூட ஆகலாம்.

பொறுமையாக முழுமையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதும் முக்கியம்.