அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்

சாப்பிடும்போது அவசரம் வேண்டாம். ரசித்து,ருசித்து மென்று தின்றால் நல்லது.
ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நிதானமாக சாப்பிடுவதுதான் சிறப்பான வழிமுறை.

குடும்பத்தோடு, நண்பர்களோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. நீங்களாக விரும்பி யாரோடு சேர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறீர்களோ, அவர் மேல்தான் அதிகப் பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்பது உளவியல் உண்மை.தினமும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கிவிடுங்கள். தினமும் 10 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக… உடலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் பழக்கத்தைத் தவிருங்கள்.

சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா?

உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுபவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது.சாப்பிடும்போது அதிகம் பேசக்கூடாது.தண்ணீரை அண்ணாந்து,தூக்கிக் குடிக்கக் கூடாது. ஏனெனில், காற்றை நாம் விழுங்கினால் வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவை ஏற்படும்.உணவை வாய்க்குள் வைத்து, வாயைத் திறக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த வழிமுறை.

அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்

சாப்பிடும்போது அவசரம் வேண்டாம்.ருசித்து மென்று தின்றால் நல்லது.
ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சாப்பிடுவதுதான் சிறப்பான வழிமுறை.

குடும்பத்தோடு, நண்பர்களோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. நீங்களாக விரும்பி யாரோடு சேர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறீர்களோ, அவர் மேல்தான் அதிகப் பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்பது உளவியல் உண்மை.தினமும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கிவிடுங்கள். தினமும் 10 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக உடலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் பழக்கத்தைத் தவிருங்கள்.

சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா?

உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுபவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது. சாப்பிடும்போது அதிகம் பேசக்கூடாது. தண்ணீரை அண்ணாந்து,தூக்கிக் குடிக்கக் கூடாது. ஏனெனில், காற்றை நாம் விழுங்கினால் வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவை ஏற்படும். உணவை வாய்க்குள் வைத்து, வாயைத் திறக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த வழிமுறை.