மிழ் நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்!

இளம் தலைமுறையினர் உங்களை விரும்பி வாக்கு அளித்தது மட்டுமல்லாமல்… வீட்டில் உள்ள அம்மா, அப்பா,தாத்தா,பாட்டி அனைவரையும் உங்களுக்கு வாக்கு அளிக்குமாறு மனம் வருந்தி, கெஞ்சி,கொஞ்சி அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறார்கள்.அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.

சிறந்த தலைமை என்பது அதிகாரத்தால் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது மட்டும் அல்ல;தனது தொலைநோக்கு பார்வை,நேர்மை மற்றும் நற்பண்புகளால் மற்றவர்களை ஊக்கப்படுத்தி,ஒரு இலக்கை நோக்கி வெற்றிகரமாக வழிநடத்துவதாகும். ஒரு சிறந்த தலைவர் என்பவர் தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தைச் சேர்ப்பதை விட, தனக்கு நிகரான மற்றும் தன்னை விடச் சிறந்த பல தலைவர்களை உருவாக்குபவராக இருப்பார்.

நீங்களும் நல்ல பல திறமைசாளிகளை சமூக அக்கறையுடன் உருவாக்க வேண்டும்.

அது மட்டுமல்ல… நல்லவனுக்கு நல்லவனாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் கெட்டவனுக்கும் நல்லவனாக இருக்க வேண்டாம்.கெட்டவனுக்கு தண்டனை கொடுக்கும் மக்கள் தலைவனாக உயர வேண்டும்.

இந்தியாவில் தமிழ்நாடு கல்வி, மருத்துவம்,சமூக பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இது இன்னும் மேம்பட்டதாக வளர்க்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி,கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் கள் தாராளமாக கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

எதிர்கால சமுதாய நலன் கருதி போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்.  மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் உதவ முடியும்.

மாவட்ட அளவில் மனநல சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்.சமீபகாலமாக குடிக்கு அடிமையாதல், இன்டர்நெட்டுக்கு அடிமையாதல்,ரீல்ஸ் மோகம்,தற்கொலை அதிகரிப்பு என மன நல பிரச்னைகள் அதிகரிக்கும் நிலையில் தமிழக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவது ஒரு பக்கம்;நோய் பாதிப்புகள் வராமல் ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.

மதுபான விற்பனையை ஒழுங்கு படுத்தியதற்கு பாராட்டுகள்…

வாழ்த்துகள்!