
நமது அன்றாட வாழ்வில் சில நேரங்களில் நாம் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
நாம் ஒன்று சொல்ல…மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு வருத்தப்படலாம்.நம்மீது தீராப்பகை பாராட்டலாம்.
சைக்காலஜி ஆய்வின்படி,90% சண்டைகள் பேசப்பட்ட வார்த்தைகளால் அல்ல,அது சொல்லப்பட்ட விதத்தால் தான் ஏற்படுகிறது.வார்த்தைகளை விட நமது குரலின் தொனி (tone) மிகவும் முக்கியம்.
இன்னொரு ஆய்வில்,85% வெற்றிக்கு நமது ஆளுமையும், தொடர்பு கொள்ளும் திறனும் தான் காரணம்,வெறும் தொழில்நுட்ப அறிவு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
சிறந்த நாகரீகமான தொடர்புகள் பெரிய பிரச்சனைகளையும் தீர்க்கும்.
நீங்கள் உங்கள் தொடர்புத் திறனை சரியாகப் பயன்படுத்துகிறீர்களா?
உள்ளடக்கம்,தொனி மற்றும் உடல் மொழி ஆகிய மூன்றும் முக்கியம்!
உங்கள் உரையாடல் எப்போதும் நேர்மறையாக இருக்கட்டும்.எந்த சூழலிலும் நிதானம் இழக்காமல் இருங்கள்.என்றும் வெற்றி உங்கள் பக்கமே!
டாக்டர் ஜி.ராஜமோகன்.

