ன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் நலக்குறைவு போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் லட்சக்கணக்கான மருத்துவச் செலவை சமாளிக்க உதவும், நிதி பாதுகாப்புதான் (Financial Protection) மருத்துவக் காப்பீடு.

விபத்து,மாரடைப்பு போன்றவற்றால் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், மாதச் சம்பளம் வாங்கும் பலரால் உடனடியாகப் பெருந்தொகையைத் திரட்ட இயலாது. உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குபவர்கள், சொத்து,நகைகளை அடமானம் வைத்து நிலைமையை சமாளிப்பவர்களும் சேமிப்பு பணத்தை
மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம்.

மருத்துவக் காப்பீட்டை குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் எடுப்பது முக்கியம்.

தமிழ் நாட்டில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.

அதன் சி.இ.ஓ.திரு. ஆனந்ராய் செய்தியாளர்களிடம் பேசினார்…

மருத்துவக் காப்பீடு எடுப்பதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.நகரம் மட்டும் அல்ல கிராமப் புறங்களிலும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

உடல் நலம் இல்லாதபோது பணம் இல்லாமல் சிகிச்சை பெற உதவுகிறோம்‌.
தாமதம் இல்லாமல் உதவுவதற்காக செயற்கை தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

தேசிய அளவில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் சந்தைப் பங்கு 31.3%, தமிழ் நாட்டில் 62%.

8 லட்சத்திற்கும் அதிகமான முகவர்கள்,18,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,15,000 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன.

தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ்,விபத்து மற்றும் பயணக் காப்பீடு வசதிகளும் உண்டு.

எளிதில் பெறக்கூடிய காப்பீட்டுத் தொகை, கூடுதல் நல்வாழ்வு பாதுகாப்பு…”வேல்யு பிளஸ் இன்சூன்ஸ்” திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறந்த மருத்துவ சிகிச்சையை எங்கு பெறலாம் என்பதை,
“டாக் டூ ஸ்டார்(Talk to Star) திட்டத்தை பயன்படுத்தி திட்டமிட்டு சிகிச்சை பெற வாய்ப்பு இருக்கிறது.

மருத்துவக் காப்பீடு, பாலிசி உள்ளவர்கள் குடும்பத்தின் மருத்துவ செலவுகளை மட்டும் குறைக்கவில்லை… குடும்பத்தின் மன அமைதியையும் பாதுகாக்கும் என்ற உறுதி சொல்லலாம்.

-சேகர், ஹெல்த் அண்ட் பியூட்டி.