மருத்துவ காப்பீட்டில் முன்னோடி நிறுவனமாக விளங்கி வருகிறது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் திரு.ஆனந்த்ராய். கடந்த 20 ஆண்டுகளாக, 17,000 மருத்துவமனைகள் இணைப்போடு செயல்பட்டு வருகிறது.

எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளின் போது சேமிப்பைக் காக்கவும்,தரமான சிகிச்சையைப் பெறவும் ஹெல்த் இன்சூரன்ஸ் (மருத்துவக் காப்பீடு) மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் வேகமாக உயர்ந்து வருவதால், தனிநபருக்கும் குடும்பத்திற்கும் இது ஒரு முக்கிய நிதிப் பாதுகாப்பாக செயல்படுகிறது.

இளம்தலைமுறை க்கு பயன்படும் வகையில்’யங் ஸ்டார் நியோ’ (Young Star NEO) எனும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமான ‘டைம் டிராவல்’ (Time Travel),இளம் வயதிலேயே காப்பீட்டைப் பெறுவதன் மூலம் பிரீமியம் தொகையில் வயது சார்ந்த சலுகையை இந்தியக் காப்பீட்டுத் துறையிலேயே முதன்முறையாக வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் முதல் வேலையிலிருந்து திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை நிலைக்கு மாறும்போது, இக்காப்பீடு தொடர்ந்து அவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளிநோயாளி பராமரிப்பு,மனநல மேலாண்மை, உடற்பயிற்சி மையங்களுக்கான அணுகல் மற்றும் வெல்னஸ் வெகுமதிகள் போன்ற நன்மைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

இளம் வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுக்கும் முடிவை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தாண்டிய தேவைகளான மருத்துவரைக் கலந்தாலோசித்தல், மனநல உதவி பெறுதல், சுறுசுறுப்பான உடற்பயிற்சி மற்றும் பிற்காலத்தில் வாழ்க்கைத் துணையையும் காப்பீட்டில் சேர்த்தல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

18 முதல் 40 வயது வரையிலான நபர்களுக்குக் கிடைக்கக்கூடிய ‘யங் ஸ்டார் நியோ, 10 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகை (வரம்பில்லா காப்பீட்டுத் தொகையைத் ‘Unlimited Sum insured” தேர்வு செய்யும் வசதியுடன்) மற்றும் ஒன்று,இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான பாலிசி கால அளவுகளையும் வழங்குகிறது.

தலைமை செயல் அதிகாரி திரு.ஆனந்த்ராய் பேசுகையில்…

“வாழ்க்கை முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் உங்கள் பிரீமியத்தைக் கணக்கிடப் பயன்படும் வயது எப்போதும் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கால இயந்திரம் தேவையில்லை. இளம் வயதிலேயே காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமே போதுமானது.
யங் ஸ்டார் நியோ-வின் ‘டைம் டிராவல்’ அம்சத்தின் மூலம்,24 வயதில் இணையும் ஒருவரது புதுப்பித்தல் பிரீமியம்,அவர் 25, 35,45 என வயதாகிக் கொண்டே சென்றாலும், பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு 25 வயது என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படும். உங்கள் பிரீமியம் வயதைப் பின்னோக்கி நகர்த்துவது என்பதில் நாங்கள் குறிப்பிடுவது இதையே தான். உங்கள் வாழ்க்கை மாறும்போது,இளம் வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது முதன்மை தேர்வாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

தற்போது பரவலாக சர்க்கரை நோய், புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய்களை எதிர்கொள்ள தனியான இன்சூரன்ஸ் திட்டங்களையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.மாற்று மருத்துவ சிகிச்சைகளுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவர்களோடு பொதுமக்களும் பாலிசிதாரர்களும் தொடர்பு கொள்ளலாம், சந்தேகங்களை கேட்கலாம்.

“ஸ்டார் ஹெல்த் ஆப்” என்ற ஒரு வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இந்த ஆப் வழியாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.பொதுவாக எழக்கூடிய சந்தேகங்கள் அனைத்திற்கும் இந்த ஆப் வழியாக தீர்வு கிடைக்கும்.

இன்று வளர்ந்து வரும் மருத்துவ உலகில்,சிகிச்சை கட்டணங்கள் மிக அதிகம்.ஆகையால், இன்சூரன்ஸ் என்பது மிகவும் அவசியம்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.