
மருத்துவ அறிவியல் தினமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், நோய்களின் தாக்கம் குறைந்தபாடில்லை. சமீபகாலமாக புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இயங்கிவரும் காவேரி மருத்துவமனை 200-க்கும் மேற்பட்ட ஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.இந்த சிகிச்சை பெரிட்டோனியம் எனும் வயிற்றுப் பகுதியின் உட்சவ்விற்கு பரவியுள்ள புற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் ஒரு அரிதான கீமோதெரபி சிகிச்சையாகும். இதில் வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஹைபெக் சிகிச்சை ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் செய்யப்படுகிறது. இந்த துறையில் தனது நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த காவேரி மருத்துவமனை, ஹைபெக் மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ என்னும் புற்றுநோய் கட்டியைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்களுக்கென்று ஒரு பிரத்யேக மையத்தையும் தொடங்கியுள்ளது. இம்மையம் முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் கண்ணுக்கு தெரிந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன.அதனைத் தொடர்ந்து, ஹைபெக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் போது வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து நேரடியாக வயிற்றுக் குழிக்குள் செலுத்தப்பட்டு எஞ்சியிருக்கும் கண்களுக்குத் தெரியாத நுண்ணிய புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. சைட்டோரிடக்டிவ் மற்றும் ஹைபெக் சிகிச்சைகளை இணைந்து செய்வதன் மூலம், நோய் பாதித்த இடத்தில் தீவிர சிகிச்சை அளிக்கவும், கீமோதெரபி
மருந்து உடலின் மற்ற பகுதிகளின் மேல் அதிகம் படாமல் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது.
கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உட்பட, வயிற்றுக்குழி மற்றும் வயிற்று உட்சவ்வைப் பாதித்துப் பரவும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மருத்துவரீதியாக தகுதியானவர்களுக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹைபெக் சிகிச்சை அளிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோயியல் நிபுணர்கள். நோயியல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும்.இந்த அறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடைபெறும் என்பதாலும், கணிசமான இரத்த இழப்பு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அனுபவம் வாய்ந்த மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக் குழுவும் இதற்கு அவசியமாகிறது. இவர்களுக்குத் துணையாக இத்தகைய நோயாளிகளைப் பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
முன்னதாக நோயாளிகளை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு நோய் பரவியுள்ள அளவை துல்லியமாக கண்டறிவதற்கு மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். இதற்கு அனுபவம் வாய்ந்த கதிரியக்கவியல் நிபுணர்கள் தேவை.
இச்சிகிச்சைக்கு கீமோதெரபி திரவத்தைச் சுமார் 41-43°C வெப்பநிலைக்குச் சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்து. அதன் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பிரத்யேக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.இத்தகைய பல்வேறுபட்ட தேவைகளால் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவ மையங்களில் மட்டுமே ஹைபெக் சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஹைபெக் சிகிச்சை குறித்து பேசிய காவேரி மருத்துவமனையின் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் சுஜய் சுசிகர் கூறுகையில், “200 ஹைபெக் சிகிச்சைகள் என்ற மைல்கல்லை நாங்கள் கடந்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். பெரிட்டோனியத்திற்கு பரவியுள்ள முற்றிய நிலை புற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைபெக் ஒரு முக்கியமான சிகிச்சை வாய்ப்பை வழங்குகிறது”என்றார்.
மன அறிவியல் மக்களை காக்க வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த மருத்துவ குழுவுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

