நவீன மருத்துவத்தில் எம்ஆர்ஐ (MRI – Magnetic Resonance Imaging) ஸ்கேன், கதிர்வீச்சு (Radiation) இன்றி உடலின் உள் உறுப்புகள் மற்றும் மென்மையான திசுக்களை மிகத் துல்லியமாகப் படம்பிடித்து, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் ஒரு முக்கியப் பரிசோதனையாகும்.

எக்ஸ்-கதிர்கள் (X-ray) மற்றும் சிடி (CT) ஸ்கேன்களைப் போலன்றி,இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதில்லை.இதனால் தேவைப்படும்போது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்வது பாதுகாப்பானது.

எம்ஆர்ஐ ஸ்கேனில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது,ஸ்கேன் எடுக்கும் நேரம் வெகுவாகக் குறைவதோடு,மிக நுண்ணிய நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.

இந்த புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கருவில் இருக்கும் சிசுவுக்கான பிரத்யேக எம்.ஆர்.ஐ,மார்பக எம்.ஆர்.ஐ, இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆராயும் கார்டியாக் எம்.ஆர்.ஐ ஆகிய சிறப்புச் சேவைகளும் இங்கு வழங்கப்படும்.

இது குறித்து மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையின் முதுநிலை ஆலோசகர், துறைத் தலைவர் டாக்டர் தினேஷ் ராம் கூறுகையில், “இந்தப் புதிய எம்.ஆர்.ஐ மையம் எங்களது நோயறிதல் திறனில்,குறிப்பாக நரம்பியல், இதயவியல் மற்றும் எலும்பு-தசை மண்டலப் பரிசோதனைகளில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

முதியோருக்கான பரிசோதனைகள், முழு உடலுக்கான எம்.ஆர்.ஐ,மூளை மற்றும் முதுகெலும்புப் பரிசோதனைகள், மகளிருக்கான சிறப்பு ஸ்கேன்கள், விளையாட்டு வீரர்களுக்கான தசைக் காயங்கள் மற்றும் DTI மற்றும் பெர்ஃபியூஷன் இமேஜிங் உள்ளிட்ட பலதரப்பட்ட நவீன ஸ்கேனிங் வசதிகளை ஒரே சாதன அமைப்பில் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இவை,நரம்பு மண்டலப் பாதைகளை மிக நுணுக்கமாக ஆராயவும், ஆழமான நோயறிதல் தகவல்களைப் பெறவும் பெரிதும் உதவுகின்றன” என்றார்.

இமேஜிங் துறையில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் குறித்துப் பேசிய அவர், “இந்த கருவியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆழ்கற்றல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது நோயாளியின் அசைவுகளால் படங்களில் ஏற்படும் தெளிவின்மையைச் சரிசெய்து,
மிகத் துல்லியமான படங்களை வழங்குகிறது. இதனால் மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டிய தேவை குறைவதுடன், பரிசோதனை நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு,துல்லியமான மற்றும் நம்பகமான நோயறிதலை செய்ய மருத்துவருக்கு உதவுகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “ஸ்கேன் எடுக்கும் நேரம் வெகுவாகக் குறைந்திருப்பது இதன் மற்றுமொரு முக்கிய சிறப்பம்சமாகும். உதாரணமாக, வழக்கமாக சுமார் 35 நிமிடங்கள் வரை ஆகும் மூளைக்கான எம்.ஆர்.ஐ ஸ்கேனை இப்போது 14 நிமிடங்களுக்குள்ளாகவே எடுத்துவிட முடியும்.நீண்ட நேரம் அசைவின்றி படுத்திருக்க முடியாமல் வலி அல்லது சிரமத்தை உணரும் நோயாளிகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதன் மூலம் நோயாளிகளுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி,மிக துல்லியமான நோயறிதல் தகவல்களை எங்களால் பெற்று உரிய சிகிச்சையை வழங்க முடிகிறது” என்றார்.

தலைமை இயக்க அதிகாரி மற்றும் குழுமத்தின் தலைமை வணிக அதிகாரி திரு.எஸ். கிருபானந்த் கூறுகையில்,  “நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட எம்.ஆர்.ஐ மையத்தின் தொடக்கம் எங்களது மருத்துவச் சேவைகளுக்கு கூடுதல் வலிமையை தந்திருக்கிறது. அடையாரில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மலர் மருத்துவமனையின் பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டு, ஒரே கூரையின் கீழ் முழுமையான மருத்துவச் சிகிச்சைகளுடன் நவீன நோயறிதல் சேவைகளையும் வழங்கும் எங்களது திறனை இந்த நவீன சாதனம் மேலும் வலுப்படுத்துகிறது.

அடையார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு தரமான மருத்துவம் மற்றும் நவீன நோயறிதல் வசதிகளை எளிதில் கிடைக்கச் செய்வதே எங்களது இலக்காக தொடர்ந்து இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்த புதிய மைய தொடக்கத்தின் மூலம்,அடையார் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை, தனது நோயறிதல் திறன்களை மேலும் வலுப்படுத்தி, தொழில்நுட்பம் சார்ந்த முழுமையான சுகாதார சேவைகளைச் சமூகத்திற்கு வழங்குவதில் மற்றொரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது.

நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்!

-பவித்ரன். Health and beauty.