பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. மருத்துவ குணமும் அதிகம். பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் மிகக் குறைந்த கலோரி கொண்டது. இதில் 90 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும். இதில் பி1, பி2, பி3, பி5, பி6 என பல வைட்டமின்களும், கனிமங்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஃபோலேட், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாது சத்துக்களும் அடங்கியுள்ளன. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பிராக்கோலியில் உள்ள பீட்டாகரோட்டின் அளவைக் காட்டிலும் இதில் இரு மடங்கு உள்ளது. கீரையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்கு கால்சியம் இதில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்கு பொட்டாசியம் உள்ளது.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. குடல் புழுக்களையும் நீக்கி விடும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். பாகற்காய் பசியைத் தூண்டக் கூடியது.

அடுத்த முறை கடைக்குப் போனால் பாகற்காயை வாங்க மறக்காதீர்கள்.

– டாக்டர் கே.சங்கர்